92 ஆயிரம் மரக்கன்று நடவு; 46 சதவீதம் இலக்கு நிறைவு!

Added : செப் 10, 2022 | |
Advertisement
திருப்பூர்;'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் - 8ல், 92,112 மரக்கன்றுகள் நடப்பட்டு, இலக்கில் இதுவரை 46 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.திருப்பூரின் உள்நாட்டு, ஏற்றுமதி பின்னலாடை வர்த்தகத்தை, லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியைபோலவே, இயற்கைக்கு பசுமைப்போர்வை போர்த்துவதற்காக, மரக்கன்று நடுவதற்கும், லட்சங்களில் இலக்கு
92 ஆயிரம் மரக்கன்று நடவு; 46 சதவீதம் இலக்கு நிறைவு!

திருப்பூர்;'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் - 8ல், 92,112 மரக்கன்றுகள் நடப்பட்டு, இலக்கில் இதுவரை 46 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.திருப்பூரின் உள்நாட்டு, ஏற்றுமதி பின்னலாடை வர்த்தகத்தை, லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியைபோலவே, இயற்கைக்கு பசுமைப்போர்வை போர்த்துவதற்காக, மரக்கன்று நடுவதற்கும், லட்சங்களில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வெற்றி அமைப்பு, வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தை துவக்கி, கடந்த 2015ம் ஆண்டு முதல், மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வளர்த்து வருகிறது. இயற்கை ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த திட்டத்தைபயன்படுத்தி, தங்களுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நட்டுவருகின்றனர்.ஏழு திட்டங்கள் மூலம், மாவட்டம் முழுவதும் 13.16 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. வனத்துக்குள் திருப்பூர் திட்டம் - 8ல், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் மரக்கன்றுகள் நடப்பட்டு, இலக்கு நெருங்கிவருகிறது.


409 மரக்கன்று


நேற்று இரண்டு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மூலனுார் ரங்கவலசு பகுதியில் சிதம்பரசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில், வேம்பு - 103, புளி - 95, நாவல் - 2, எலுமிச்சை - 2, சப்போட்டா - 2, மா மரம் - 3, நெல்லி - 2 என, மொத்தம் 209 மரக்கன்றுகள் நடப்பட்டன.கன்னிவாடி எரச்சபாடி கிராமத்தில், செல்லமுத்துவுக்கு சொந்தமான தோட்டத்தில், 30 தேக்கு; 50 குமிழ்; 120 மகோ கனி என 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. நேற்று ஒரே நாளில், 409 மரக்கன்றுகள் நடப்பட்டன. வனத்துக்குள் திருப்பூர் திட்டம் 8ல், இதுவரை, 92,112 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.இந்த திட்டத்தில் மரக்கன்று நட விரும்புவோர், 90470 86666 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X