புகைப்பிடிக்க தடைமீறினால் அபராதம்| Dinamalar

புகைப்பிடிக்க தடைமீறினால் அபராதம்

Added : செப் 10, 2022 | |
சுல்தான்பேட்டை:சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள் உள்ளன. பஸ் ஸ்டாப், மருத்துவமனை வளாகம், உணவு விடுதி, பேக்கரி உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், சந்தோஷ்குமார், கார்த்திக்குமார், அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட

சுல்தான்பேட்டை:சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள் உள்ளன. பஸ் ஸ்டாப், மருத்துவமனை வளாகம், உணவு விடுதி, பேக்கரி உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், சந்தோஷ்குமார், கார்த்திக்குமார், அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட குழுவினர் பொது இடங்களில் புகைபிடிப்போர் மற்றும் புகைபிடிப்பதற்கு அனுமதிக்கும் கடை உரிமையாளர்கள் ஆகியோரை கண்டறிந்து 200 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.மளிகை கடைகள், பெட்டி கடைகள், பேக்கரிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுகிறதா எனவும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். சுகாதாரத்துறையினர் கூறுகையில், ''பொது இடங்களில் யாரும் புகை பிடிக்கக் கூடாது.இதனை மீறி செயல்படுவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும்'' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X