நொய்யல் கரையோர வீடுகள் இடித்து அகற்றம்

Added : செப் 10, 2022 | |
Advertisement
திருப்பூர்:நொய்யல் கரையோரம் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகள் இடித்து அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.ஐகோர்ட் உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் நீர் வழிப் பாதை ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றும் பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், நொய்யல் ஆறு, அமராவதி ஆறு, குளங்கள் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டியிருந்த
நொய்யல் கரையோர வீடுகள் இடித்து அகற்றம்

திருப்பூர்:நொய்யல் கரையோரம் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகள் இடித்து அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.ஐகோர்ட் உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் நீர் வழிப் பாதை ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றும் பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், நொய்யல் ஆறு, அமராவதி ஆறு, குளங்கள் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டியிருந்த நுாற்றுக்கணக்கான கட்டடங்கள் நோட்டீஸ் வினியோகித்து, காலி செய்து, இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் நொய்யல் ஆற்றின் கரையில் காசிபாளையம் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அங்கிருந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு சென்னிமலைப்பாளையம் பகுதியில் இடம் வழங்கப்பட்டது.இதையடுத்து ஆலங்காடு, நடராஜா தியேட்டர் ரோடு, திருவள்ளுவர் தோட்டம், எம்.ஜி.ஆர்., காலனி, சாயப்பட்டறை ரோடு, சத்யா காலனி உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறியப்பட்டது.அவற்றுக்கு உரிய வகையில் அறிவிப்பு வழங்கி, வீடுகள் காலி செய்யப்பட்டன. ெபரும்பாலான நபர்களுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடுகள் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் வீடுகள் காலி செய்து, அவை இடித்து அகற்றப்பட்டன.இதில் நடராஜா தியேட்டர் எதிரே, காவிரியம்மன் மண்டபத்தை ஒட்டிய பகுதியில் எம்.ஜி.ஆர்., காலனியில் 67 வீடுகள் ஆற்றின் கரையில் இருந்தன. அவற்றிலிருந்தவர்களுக்கு நெருப்பெரிச்சல் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது.இதனால், அப்பகுதியில் குடியிருந்தவர்கள் தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு வீடுகளை காலி செய்தனர். அப்பகுதியில் நேற்று பொக்லைன் வாகனம் மூலம் வீடுகள் இடித்து அகற்றும் பணி நேற்று மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X