மாணவர்களுக்குசைக்கிள் போட்டி| Dinamalar

மாணவர்களுக்குசைக்கிள் போட்டி

Added : செப் 10, 2022 | |
திருப்பூர்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நேற்று நடந்தது.கலெக்டர் வினீத் போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வரவேற்றார். சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில், போட்டிகள் நடந்தது. மாவட்டத்தின்
மாணவர்களுக்குசைக்கிள் போட்டி

திருப்பூர்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நேற்று நடந்தது.கலெக்டர் வினீத் போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வரவேற்றார். சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில், போட்டிகள் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்றனர்.மாணவர், 13 வயது பிரிவில், சபரீஸ்வர் (பிளாட்டோஸ் அகாடமி) 15 வயது பிரிவில், சஞ்சிவ்ராகவேந்திரன் (எஸ்.ஆர்.ஆர்., காங்கயம்), 17 வயது பிரிவில், விஷ்ணுவர்தன், (எஸ்.ஆர்.ஆர்., காங்கயம்) முதலிடம் பெற்றனர்.மாணவியர், 13 வயது பிரிவில், சாருநிதா (செயின்ட் ஜோசப் மெட்ரிக்), 15 வயது பிரிவில், அனுஸ்ரீ (பிளாட்டோஸ் அகாடமி), 17 வயது பிரிவில் அபிநயஸ்ரீ (ஜெய்வாபாய் பள்ளி) முதலிடம் பெற்றனர். முதல் பரிசு பெற்றவர்களுக்கு, 5,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சைக்கிளிங் அசோசியேஷன் ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, மாவட்ட கபடி கழக இணை செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X