மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற காதலனால் நின்றது திருமணம்
தண்டையார்பேட்டை
: தண்டையார்பேட்டையில், மணமகனிடம் இருந்து தாலியை பறித்து, மணமகளுக்கு
கட்ட முயன்ற காதலனுக்கு அடி,- உதை விழுந்தது. திருமணமும்
நின்றது.தண்டையார்பேட்டை, நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்த வெங்கடேசன் மகள்
ரேவதி, 20. இவருக்கும் தண்டையார்பேட்டை, நேதாஜி நகரை சேர்ந்த மரைன்
இன்ஜினியர் மணிகண்டன், 26, என்பவருக்கும், நேற்று காலை, நேதாஜி நகர்
முருகன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.
காலை 6:00 முதல்
காலை 7:30 மணி முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது. முகூர்த்த நேரத்தில்,
மணிகண்டன் கையில் அய்யர் தாலி எடுத்துக் கொடுத்த நிலையில், அவர் ரேவதி
கழுத்தில் கட்டச் சென்றார்.அப்போது திடீரென மணமேடைக்கு வந்த வாலிபர்
ஒருவர், மணிகண்டன் கையில் இருந்த தாலியை பறித்து, ரேவதி கழுத்தில் கட்ட
முயன்றார்.இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, வாலிபரை பிடித்து
'கவனித்து' ஆர்.கே.நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில்
அவர், தண்டையார்பேட்டை கைலாசம் தெருவைச் சேர்ந்த சதீஷ், 23, என
தெரிந்தது.மேலும் இவரும் ரேவதியும், ராயபுரத்திலுள்ள நகைக் கடையில் ஒன்றாக
வேலை பார்த்துள்ளனர். அப்போது, இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. ரேவதி
தன் காதலை, வீட்டில் சொல்லாமல் மறைத்துள்ளார். இந்நிலையில், ரேவதி வீட்டில்
மணிகண்டனுடன் திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.இதுகுறித்து சதீஷிடம் ரேவதி
கூறிய போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது சதீஷ், திருமணத்தை நிறுத்தப்
போவதாக சவால் விட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம்
நேதாஜி நகரிலுள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடந்ததை, சதீஷ்
நோட்டமிட்டுள்ளார்.பின், காலையில் திட்டமிட்டபடி திருமணத்தை நிறுத்தியது
தெரிந்தது.இதுகுறித்து இருவீட்டாரும், ஆர்.கே.நகர் போலீசில் புகார்
அளித்தனர். பின்னர், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு
வழக்கு மாற்றப்பட்டது.இதற்கிடையில், மணிகண்டன் இந்த திருமணத்தில்
விருப்பமில்லை எனவும், திருமண செலவை வழங்குமாறும் கேட்க, பெண் வீட்டாரும்
சம்மதித்தனர். திருமணத்தை நிறுத்திய சதீஷை, போலீசார் எச்சரித்து
அனுப்பினர்.
தாத்தாவை கொன்று புதைத்த பேரன் 8 மாதத்துக்கு பின் அம்பலமானது
துமகூரு : துமகூரில், அத்தைக்கு சொத்து செல்வதை தவிர்க்க, தாத்தாவை பேரனே கொன்று புதைத்த கொடூரம், எட்டு மாதங்களுக்கு பின் அம்பலத்துக்கு வந்தது.துமகூரு மாவட்டம், குப்பி தாலுகா, கல்லதர்கரே போவி காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தப்பா, 75. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தன் பெயரில் இருக்கும் சொத்தை மகன், மகள் இருவருக்கும் சரிசமமாக பிரித்து வழங்க வேண்டும் என கோவிந்தப்பா கூறி வந்துள்ளார். இது, மகன் வழி பேரன் மோகன், 22, என்பவருக்கு பிடிக்கவில்லை.தன் அத்தைக்கு எந்த காரணத்துக்கும் சொத்து வழங்க கூடாது என்று கூறி தாத்தாவிடம் அவ்வப்போது சண்டை போட்டு வந்துள்ளார். தந்தைக்கு தெரியாமல் பலமுறை தாத்தாவை கொல்ல முயற்சித்துள்ளார்.
கடந்த ஜனவரி 22ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து, தன் நண்பர்கள் பிரஜ்வல், 23, சேத்தன், 22, ஆகியோர் உதவியுடன் இரும்பு தடியால் தாத்தாவின் தலையில் அடித்து கொலை செய்தார். உடலை நிலத்தில் புதைத்து விட்டு, அதன் மீது புற்கள் நட்டு வைத்துள்ளனர்.சந்தேகம் வராதபடி வழக்கம் போல் பேரன் செயல்பட்டுள்ளார். கோவிந்தப்பா அடிக்கடி தன் உறவினர்களை சந்திக்க வெளியூர்களுக்கு செல்வது வழக்கம்.
இதனால், அவரை காணவில்லை என்றதும், உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று கருதினர். ஆனால், நீண்ட நாட்களாகியும் காணவில்லை என்பதால், சேலுார் போலீசில் மகன் புகார் செய்தார்.இதற்கிடையில், கொலை செய்த பின், தன் நண்பர்களுக்கு மோகன் அடிக்கடி மது விருந்து வைத்துள்ளார். சில நாட்களாக பார்ட்டியை நிறுத்தி விட்டார். இதனால், விரக்தியடைந்த நண்பர்கள், மோகன், தன் தாத்தாவை கொலை செய்தது குறித்து மது போதையில் பலரிடமும் உளறினர்.இவ்விஷயம் கிராமம் முழுதும் காட்டு தீ போல் பரவியது.
போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் உண்மை என்பது தெரிந்தது. இதையடுத்து, பேரன் மோகன், இவரது நண்பர்கள் பிரஜ்வல், சேத்தன் ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.மேலும், தாத்தாவின் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இவ்விஷயம் துமகூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
3 சிறுமியர் பலாத்காரம் வாலிபருக்கு '30 ஆண்டு'
மாண்டியா : மொபைல் போனில் ஆபாச படங்களை காட்டி மூன்று சிறுமியரை, பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மண்டியாவின் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணாவின், அரகரே கிராமத்தில் வசிப்பவர் அஜய், 35. இவர் 2019 மே, ஜூன் மாதங்களில், ஆறரை, எட்டரை, பத்தரை வயது சிறுமியரை சாக்லேட், தின்பண்டம் ஆசை காண்பித்து, கடத்தி சென்றார்.

அறையில் அடைத்து வைத்து மொபைல் போனில் ஆபாச படங்கள் காண்பித்து, பாலியல் பலாத்காரம் செய்தார். இதை யாரிடமாவது கூறினால், கொலை செய்வதாக மிரட்டினார்.சிறுமியர் பயப்படாமல், பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்தனர். இவர்கள் அளித்த புகாரின்படி, 2019 ஜூலை 8ல், அரகரே போலீசார், அஜயை கைது செய்தனர்.
மாண்டியாவின் கூடுதல் செஷன்ஸ் மற்றும் விரைவு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.விசாரணையில் குற்றம் நிரூபணமானதால், அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி நாகஜோதி நேற்று தீர்ப்பளித்தார்.
பள்ளத்தில் கார் கவிழ்ந்து 4 பேர் பரிதாப பலி
நியூ டெஹ்ரி : இமயமலையில் உள்ள பத்ரிநாத் கோவிலுக்குச் சென்ற கார், நேற்று வழியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில், நான்கு பேர் உயிரிழந்தனர்; டிரைவர் உட்பட இருவர் காயமடைந்தனர்.மஹாராஷ்டிராவைச் சேர்ந்த டிரைவர் உட்பட ஆறு பேர், ஹரித்துவாரில் இருந்து, நேற்று உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோவிலுக்கு காரில் சென்றனர். டெஹ்ரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரி அருகே சென்று கொண்டிருந்த போது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். இதில், பலத்த காயமடைந்த ஒருவரும், டிரைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பிச்சை எடுப்பது போல் நாடகம்போரூரில் திருட்டு கும்பல் சிக்கியது
போரூர் : சென்னை, போரூர் சிக்னலில் ஒருவர் காலில் கட்டுகளுடன் பரிதாபமான நிலையில், அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுத்து வந்தார். இதனால் ஏற்பட்ட விபத்து அபாயம் குறித்து, சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.
இதையடுத்து, அப்பகுதியில் பிச்சை எடுப்போரை அப்புறப்படுத்துமாறு, காவல் துறை உயர் அதிகாரிகள், போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற போரூர் போலீசார், குறிப்பிட்ட நபரிடம் விசாரித்தனர். அந்த நபர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் எழுந்தது.இதையடுத்து, போலீசார் அந்த நபரின் காலில் கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்த்தனர்.
ஆனால், காலில் காயங்கள் ஏதும் இல்லை. மக்களை ஏமாற்ற, அவர் போலி கட்டுப்போட்டு வலம் வந்தது தெரிந்தது.தொடர் விசாரணையில், அங்கு பிச்சை எடுத்து வாழும் வயதான மூதாட்டி ஒருவரிடம் 10 ஆயிரம் ரூபாய், இந்த நபர் திருடியது தெரிந்தது.மேலும், இவரது தந்தை அதே பகுதியில் சாமியார் வேடத்தில் மக்களை ஏமாற்றி பிழைப்பதும், அவரது அக்கா அதே பகுதியில் பிச்சை எடுத்து வருவதும் தெரிய வந்தது.நாக்பூரை பூர்வீகமாக கொண்ட இவர்கள் மட்டுமின்றி, ஏராளமானோர் சென்னை வந்து, அம்பத்துார், பாடி உள்ளிட்ட பகுதிகளில் தங்கி, பல்வேறு இடங்களில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுவதும், பார்வை மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் பணத்தை பறித்து செல்வதும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.இதையடுத்து, போரூர் போலீசார், அந்த நபர் மற்றும் அவரது தந்தை, அக்கா ஆகியோரை பிடித்து, விசாரித்து வருகின்றனர்.
பெண்களிடம் சில்மிஷம்:'காமுக' வாலிபர் சிக்கினார்
மடிப்பாக்கம் : சென்னை, உள்ளகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நேற்று முன்தினம் சாலையில் நடந்து வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவன், அந்த பெண்ணின் பின்புறத்தை கிள்ளி சென்றுள்ளார்.இது குறித்த புகாரையடுத்து, மடிப்பாக்கம் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்ததில், உள்ளகரம், செல்வகணபதி தெருவை சேர்ந்த அஜித்குமார், 22, என்பது தெரிய வந்தது.
போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.இதில், கடந்த நான்கு ஆண்டுகளாக, பல பெண்களிடம் அநாகரிகமாக நடந்துள்ளதும், வேளச்சேரி, பழவந்தாங்கல் காவல் நிலையங்களில், இதே செயலுக்காக இவர் மீது வழக்கு பதிவாகி உள்ளதும் தெரிய வந்த