செக் போஸ்ட் 1-

Added : செப் 10, 2022 | |
Advertisement
'தில்லுமுல்லு' வேலைகளுக்கு 'ஆப்பு'கோல்டு சிட்டி முனிசி.,யில் கமிஷனராக இருந்தவர், ஹெல்த் இன்ஸ்பெக்டராக கோலாருக்கு போய் சேர்ந்து விட்டார். இவரை விரட்ட 25 முனிசி., உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் செஞ்சாங்க. ஆனாலும் அவரை அசைக்க முடியாதபடி, பூக்கார 'மாஜி' அசெம்பிளிகாரர் பக்கபலமாக இருந்தார்.ஆயினும், தகுதி உள்ளவரை தான் கமிஷனராக நியமிக்கணும் என்ற நீதிமன்ற



'தில்லுமுல்லு' வேலைகளுக்கு 'ஆப்பு'

கோல்டு சிட்டி முனிசி.,யில் கமிஷனராக இருந்தவர், ஹெல்த் இன்ஸ்பெக்டராக கோலாருக்கு போய் சேர்ந்து விட்டார். இவரை விரட்ட 25 முனிசி., உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் செஞ்சாங்க. ஆனாலும் அவரை அசைக்க முடியாதபடி, பூக்கார 'மாஜி' அசெம்பிளிகாரர் பக்கபலமாக இருந்தார்.ஆயினும், தகுதி உள்ளவரை தான் கமிஷனராக நியமிக்கணும் என்ற நீதிமன்ற தீர்ப்பால், பழையபடி ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலையை பார்க்க அவர் சென்று விட்டார்.இவரால் சில முனிசி., உறுப்பினர்கள், 'தில்லுமுல்லு' வேலைகள் செய்து கொண்டதாகவும், இவரும் கூட முறைகேடாக சொத்து குவித்து கொண்டதாகவும் லேட்டாக வெளியே தெரியவந்திருக்கு. எப்படியும் ஒருநாள் அவரும் சிக்கப்போறாருன்னு வட்டார தகவல்கள் கூறுகின்றன.அமலுக்கு வராத திட்டங்கள்!ரா.பேட்டையில் உள்ளபுல் மார்க்கெட்டை தரைமட்டமாக இடித்து தள்ளி விட்டு, பிரமாண்ட மார்க்கெட், வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்துவதாக முனிசி.,யில் தீர்மானம் போட்டாங்களே. அதற்கு கோலார் மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கிட்டாரா, இல்லையா? இது, அரசு கவனத்துக்கு சென்றதா. 100 கோடி ரூபாய் திட்டத்தில் உருவாக வேண்டிய இந்த 'சூப்பர்' மார்க்கெட் வெறும் கனவாகவே இருக்குது. கோல்டு சிட்டியின் தரத்தை உயர்த்தும் இந்த நவீன மார்க்கெட் பணிகளை துவங்குவது எப்போது?நடைபாதை எல்லாம் வாகன நிறுத்துமிடமாக மாறி இருப்பதை தடுக்க திட்டமே இல்லையான்னு, அவதிப்படுறவங்க அங்கலாய்க்கிறாங்க. முனிசி., யில் போடும் திட்டமெல்லாம் சூப்பர் தான். ஆனால், அமலுக்கு வரவில்லையே.தொடரும் கமிஷனர் மாற்றம்!கோல்டு சிட்டி முனிசி.,யில் அடிக்கடி தலைவர்கள், துணைத் தலைவர்கள் பதவிக்கு தான் மாற்றம் ஏற்படுவது வழக்கம்.இதனால் உறுப்பினர்கள் காட்டில் பண மழையும் பெய்யும். ஆனால் அதற்கு வழியே இல்லை. அதற்கான சக்தியும் தற்போது இருப்பவர்களிடம் இருக்குதா என்பதே சந்தேகம்.முனிசி., தலைவர் பதவிக்குஇரண்டரை ஆண்டுகள் நிறைவு செய்யத்தான் பல, 'எல்' பட்டுவாடா செய்யப்பட்டதாம். அவரை பதவியில் இருந்து இறக்க வேணும்னு யாராவது ஈடுபட்டால் வாங்கிய பணத்தை கக்கி விட்டு போகணும்னு அதிரடி ஆக் ஷன் இருப்பதால் தடுமாற்றம் ஏற்பட்டிருக்குதாம்.அடுத்த இரண்டரை ஆண்டுகள் கூட இதே பார்முலா தான் பயன்படுத்த போறாங்களாம். அதனால் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை எளிதில் பறிக்க வாய்ப்பு மிக மிக குறைவு.நடப்புஇரண்டு ஆண்டில், ஐந்து கமிஷனர்கள் மாறிட்டாங்க. இதனால் முனிசி., நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டிருக்குதாம். இந்த கமிஷனரின் பதவியும் நீடித்து இருக்குமா அல்லது இவரும் இடம் மாறிடுவாரான்னு தெரியல?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X