மைசூரு தசரா யானைகள் எடை எவ்வளவு?அம்பாரி சுமக்கும் அபிமன்யூ 5,000 கிலோ!

Added : செப் 10, 2022 | |
Advertisement
மைசூரு,-மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும், 14 யானைகளின் எடை நேற்று கணக்கிடப்பட்டது. தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யூ யானை, 5,000 கிலோ எடை உள்ளது.மைசூரு தசரா விழாவிற்காக அரண்மனை வளாகத்தில், 14 யானைகள் காட்டில் இருந்து அழைத்து வரப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு யானையின் எடை எவ்வளவு கிலோ இருக்கிறது என்பது, நகரின் தன்வந்த்ரி சாலையில் உள்ள எலக்ட்ரானிக் எடை போடும்
மைசூரு தசரா யானைகள் எடை எவ்வளவு?அம்பாரி சுமக்கும் அபிமன்யூ 5,000 கிலோ!



மைசூரு,-மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும், 14 யானைகளின் எடை நேற்று கணக்கிடப்பட்டது. தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யூ யானை, 5,000 கிலோ எடை உள்ளது.மைசூரு தசரா விழாவிற்காக அரண்மனை வளாகத்தில், 14 யானைகள் காட்டில் இருந்து அழைத்து வரப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு யானையின் எடை எவ்வளவு கிலோ இருக்கிறது என்பது, நகரின் தன்வந்த்ரி சாலையில் உள்ள எலக்ட்ரானிக் எடை போடும் மையத்தில் நேற்று கணக்கிடப்பட்டது.தசராவின் முக்கிய நிகழ்வான ஜம்புசவாரியில், தங்க அம்பாரியை எட்டு முறை சுமந்த அர்ஜுனா, 5,950 கிலோ எடை இருந்தது. இம்முறை அம்பாரியை சுமக்கும் அபிமன்யூ யானை 5,000 கிலோ உள்ளது. கடந்த மாதத்தை விட, 230 கிலோ அதிகமாகியுள்ளது.மற்ற யானைகளான கோபாலஸ்வாமி - 5,460 கிலோ; தனஞ்சயா - 4,890 கிலோ; பீமா - 4,345 கிலோ; மஹேந்திரா - 4,450 கிலோ; காவேரி - 3,245 கிலோ; சைத்ரா - 3,235 கிலோ; லட்சுமி - 3,150 கிலோ.ஸ்ரீராமா - 4,475 கிலோ; சுக்ரீவா - 4,785 கிலோ; கோபி - 4,460 கிலோ; பார்த்தசாரதி - 3,445 கிலோ; விஜயா - 2,760 கிலோ உள்ளது.இது குறித்து, மைசூரு மாவட்ட துணை வனக் காப்பாளர் கரிகாலன் கூறுகையில், ''தசரா யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கியதால் எடை அதிகமாகியுள்ளது. ''காட்டு யானையால் தாக்குதலுக்குள்ளான பீமா, ஒரே மாதத்தில் 425 கிலோ அதிகமாகியிருப்பது மகிழ்ச்சி தந்துள்ளது. வரும் 12ம் தேதிக்கு பின், பீரங்கி ஒத்திகை நடத்தப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X