விஷம் கொடுத்து மாணவர் கொலை: காரைக்கால் நகரில் கடையடைப்புஅரசு டாக்டர்கள் 2 பேர் 'சஸ்பெண்ட்'

Added : செப் 10, 2022 | |
Advertisement
காரைக்கால்-விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவருக்கு, அரசு பொது மருத்துவமனையில் காலத்தோடு சிகிச்சை அளிக்காததை கண்டித்து காரைக்காலில் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த விவகாரத்தில் அரசு டாக்டர்கள் 2 பேர் நேற்று அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் கோட்டுச்சேரி அடுத்த நேரு நகரில் 'சர்வைட்' என்ற தனியார்
விஷம் கொடுத்து மாணவர் கொலை: காரைக்கால் நகரில் கடையடைப்புஅரசு டாக்டர்கள் 2 பேர்  'சஸ்பெண்ட்'



காரைக்கால்-விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவருக்கு, அரசு பொது மருத்துவமனையில் காலத்தோடு சிகிச்சை அளிக்காததை கண்டித்து காரைக்காலில் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த விவகாரத்தில் அரசு டாக்டர்கள் 2 பேர் நேற்று அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் கோட்டுச்சேரி அடுத்த நேரு நகரில் 'சர்வைட்' என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பாலமணிகண்டன் என்ற மாணவர் 8ம் வகுப்பு படித்தார். படிப்பில் சக மாணவியுடன் ஏற்பட்ட போட்டி காரணமாக, கடந்த 3ம் தேதி, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டார். சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.காரைக்கால் அரசு மருத்துவமனையில் மாணவர் பாலமணிகண்டன் சிகிச்சையில் இருந்தபோது, போலீசாரும், டாக்டர்களும் அலட்சியமாக செயல்பட்டதால் தான் உயிரிழந்தார். அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோரும், அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் குற்றம்சாட்டினர். அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள், போலீசாரை கண்டித்து காரைக்காலில் 9ம் தேதி (நேற்று) முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி, காரைக்கால் பிராந்தியத்தில் நேற்று கடை அடைப்பு போராட்டம் காலை 6:00 மணி முதல், மாலை 5:30 மணி வரை நடந்தது.இதன் காரணமாக, பாரதியார் சாலை, திருநள்ளார் சாலை, மாதா கோவில் வீதி உள்ளிட்ட பிரதான சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தது. ஆட்டோக்கள், மினி டெம்போக்கள் இயங்கவில்லை. ஓட்டல்களும் திறக்கப்படவில்லை. அனைத்து பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல் இயங்கின. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.இந்த போராட்டத்தில் காரைக்கால் இந்து முன்னணி, காரைக்கால், திருநள்ளாறு மற்றும் திருப்பட்டினம் வியாபாரிகள் சங்கம், ஆட்டோ, மினிடெம்போ சங்கத்தினர், ஓட்டல்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.இந்து முன்னணி சார்பில், மாணவர் இறப்பிற்கு நீதி விசாரணை கேட்டு, காரைக்கால் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடந்தது. தொடர்ந்து, காரைக்கால் கலெக்டர் முகமது மன்சூரை சந்தித்து மனு அளித்தனர்.மாணவருக்கு சரியாக சிகிச்சை அளிக்காத டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் சம்பளம் பெற்றுக் கொண்டு, சர்வீஸ் பிளேஸ்மெண்ட் என்ற பெயரில் புதுச்சேரி மற்றும் பிற இடங்களில் பணிபுரிவோரை உடனடியாக மருத்துவமனைக்கு திரும்ப அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். கடையடைப்பு போராட்டத்தை முன்னிட்டு, காரைக்காலில் தெற்கு எஸ்.பி., சுப்ரமணியன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.


பணியில் அலட்சியம்




2 டாக்டர்கள் 'சஸ்பெண்ட்'


இந்நிலையில், காரைக்கால் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், பணியில் அலட்சியமாக இருந்த காரைக்கால் அரசு மருத்துவமனை டாக்டர்கள் விஜயக்குமார், பாலாஜி திருவேங்கடம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்யுமாறு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார். இதையடுத்து, இரண்டு டாக்டர்களையும் சஸ்பெண்ட் செய்து, சுகாதாரத் துறை செயலர் உதயக்குமார் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X