மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சி

Added : செப் 10, 2022 | |
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் நாஹர் பள்ளி மாணவர்கள் மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.காரைக்குடியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் முதன்மையான ஆராய்ச்சி பிரிவுகளில் ஒன்றான மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது. இங்கு விழுப்புரம் நாஹர் பள்ளி மாணவி கோபிகா, மாணவர்கள் குமரவேல் மற்றும் வெங்கடபதி,
மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சி



விழுப்புரம்-விழுப்புரம் நாஹர் பள்ளி மாணவர்கள் மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.காரைக்குடியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் முதன்மையான ஆராய்ச்சி பிரிவுகளில் ஒன்றான மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது. இங்கு விழுப்புரம் நாஹர் பள்ளி மாணவி கோபிகா, மாணவர்கள் குமரவேல் மற்றும் வெங்கடபதி, வேலாயுதம் ஆகியோர் ஒரு நாள் பயிற்சி பட்டறையில் ஈடுபட தேர்வு செய்யப்பட்டனர்.இந்த மாணவர்கள் தங்கள் சகாக்களுடன் சேர்ந்து தங்கள் பள்ளி மட்டத்தில் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடவும், அவர்களின் அறிவியல் கிளப் செயல்பாட்டு நேரங்கள் மற்றும் அறிவியல் நடைமுறை கற்றல் செயல்பாடு நேரங்களிலும் அறிவு களத்தை உருவாக்கவும் வழிகாட்டப்பட்டனர்.இந்த 3 பேருக்கும்,ஆசிரியர்கள் காயத்திரி மற்றும் சரவணன் ஆகியோர் வழிகாட்டிகளாக இருந்தனர். இக்குழுவினரை பள்ளி முதல்வர் மாக்சிமாஸ் ஹெச் ரோஸ் வாழ்த்தி பாராட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X