போலீஸ் செய்திகள்

Added : செப் 10, 2022 | |
Advertisement
கத்திக்குத்துசிவகாசி: திருத்தங்கல் மேற்கு ரத வீதியை சேர்ந்தவர் பார்த்திபன் 50. இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம், மது குடிக்க பணம் கேட்டுள்ளார். தர மறுத்ததால் பார்த்திபனை தகாத வார்த்தை பேசி, கத்தியால் குத்தினார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.சுவாமி கும்பிடுவதில் தகராறுசிவகாசி: கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள முத்தாலம்மன் கோயில் சுவாமி

கத்திக்குத்து

சிவகாசி: திருத்தங்கல் மேற்கு ரத வீதியை சேர்ந்தவர் பார்த்திபன் 50. இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம், மது குடிக்க பணம் கேட்டுள்ளார். தர மறுத்ததால் பார்த்திபனை தகாத வார்த்தை பேசி, கத்தியால் குத்தினார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

சுவாமி கும்பிடுவதில் தகராறு
சிவகாசி: கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள முத்தாலம்மன் கோயில் சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினரை சேர்ந்தவர்களுக்குள் மோதல் போக்கு இருந்தது. இந்நிலையில் கோயில் முன்பு பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் இருந்த இரு தரப்பினரை சேர்ந்த 11 பெண்கள் உட்பட 31 பேர் மீது மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கொலை மிரட்டல்
சிவகாசி: திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முன்னின்ற பெருமாள் 42. டெய்லரான இவர் தனது வீட்டில் துணி தைத்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் இவரது வீட்டு வாசலை மறைத்து நின்றார். வெளியே போகச் சொன்ன முன்னின்ற பெருமாளை கட்டையால் தலையில் அடித்து, கொலை மிரட்டல் விடுத்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுவன் மாயம்
விருதுநகர்: விருதுநகர் இந்திராநகரை சேர்ந்தவர் சுகிதா 35, இவரது 13 வயது மகன் அவ்வப்போது வீட்டை விட்டு மதுரை, பிற ஊர்களுக்கு சென்றுவிடுவது வழக்கம். செப். 6 மதியம் 3:00 மணிக்கு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X