அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

Added : செப் 10, 2022 | |
Advertisement
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி தலைமை வகித்தார். நிதி காப்பாளர் விக்னேஷ் கோரிக்கையை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க பொது செயலாளர் லட்சுமி நாராயணன் பேசுகையில், "ராஜஸ்தான்,
அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி தலைமை வகித்தார். நிதி காப்பாளர் விக்னேஷ் கோரிக்கையை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க பொது செயலாளர் லட்சுமி நாராயணன் பேசுகையில், "ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களில் புதிய ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டது போல் தமிழகத்திலும் ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு, பிற மாநிலங்களில் பணிபுரியும் சி.பி.எஸ்., திட்ட ஊழியர்களுக்கு வழங்குவது போன்று தமிழகத்தில் சி.பி.எஸ்., திட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், என்றார்.

மாவட்ட செயலாளர் வைரவன், தலைவர் லியாகத் அலி, ஊரகவளர்ச்சித்துறை செயலாளர் ராஜகோபால், அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் கண்ணன், முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் பேசினர். கிளை நிர்வாகி தர்மராஜ் நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X