அனைத்து கல்வி நிறுவன கேன்டீன்களில் ஆய்வு

Added : செப் 10, 2022 | |
Advertisement
ஈரோடு : ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கல்வி நிறுவனங்களில் உள்ள கேன்டீன், விடுதிகளில், தரமாக உணவு தயாரிக்கப்படுகிறதா, என்பது குறித்து, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் ஆய்வு செய்தனர்.இதன்படி மாவட்டத்தில் உள்ள, 234 கல்வி நிறுவனங்களில் ஆய்வு செய்துள்ளனர். இதில் கேன்டீன், சமையலறை, டைனிங் ஹால் துாய்மை, குடிநீர், சமையல் செய்யும் பகுதி,



ஈரோடு : ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கல்வி நிறுவனங்களில் உள்ள கேன்டீன், விடுதிகளில், தரமாக உணவு தயாரிக்கப்படுகிறதா, என்பது குறித்து, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் ஆய்வு செய்தனர்.

இதன்படி மாவட்டத்தில் உள்ள, 234 கல்வி நிறுவனங்களில் ஆய்வு செய்துள்ளனர். இதில் கேன்டீன், சமையலறை, டைனிங் ஹால் துாய்மை, குடிநீர், சமையல் செய்யும் பகுதி, சமையலர்களின் சுகாதாரம், கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்களா என ஆய்வு செய்து முடித்துள்ளனர்.

சில விடுதி, கேன்டீன்களில் குறைபாடுகளை தெரிவித்து, ஒரு வாரத்துக்குள் சரி செய்து கொள்ள அவகாசம் தரப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X