அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு எதிரொலி; ஓணம் கொண்டாடாத மலைவாழ் மக்கள்

Added : செப் 10, 2022 | |
Advertisement
மூணாறு : மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சியில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டால் மலைவாழ் மக்கள் ஓணம் கொண்டாட இயலாத நிலை ஏற்பட்டது.மூணாறு அருகே அடர்ந்த வனத்தினுள் உள்ள இடமலைகுடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கின்றனர். அங்கு இடலிபாறை, சொசைட்டி, பரப்பியாறு ஆகிய குடிகளில் (கிராமம்) ரேஷன் கடைகளும், அதனுடன் சேர்ந்து அத்தியாவசிய பொருட்கள் விற்கும்

மூணாறு : மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சியில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டால் மலைவாழ் மக்கள் ஓணம் கொண்டாட இயலாத நிலை ஏற்பட்டது.மூணாறு அருகே அடர்ந்த வனத்தினுள் உள்ள இடமலைகுடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கின்றனர்.

அங்கு இடலிபாறை, சொசைட்டி, பரப்பியாறு ஆகிய குடிகளில் (கிராமம்) ரேஷன் கடைகளும், அதனுடன் சேர்ந்து அத்தியாவசிய பொருட்கள் விற்கும் நியாயவிலை கடைகளும் உள்ளன. அவற்றிற்கு மூணாறில் செயல்படும் கிரிஜன் சொசைட்டி பொருட்களை சப்ளை செய்கிறது.தென்மேற்கு பருவ மழையின் போது இடமலைகுடிக்குச் செல்லும் ரோடு பல இடங்களில் சேதமடைந்தது. அதனால் அங்கு சென்று வந்த அதிக உந்து சக்தியைக் கொண்ட ஜீப்புகள் கூட செல்ல இயலாத நிலை ஏற்பட்டதால் ரேஷன் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மூணாறு, மாங்குளம், தமிழகத்தில் உள்ள வால்பாறை ஆகிய பகுதிகளுக்கு நீண்ட தூரம் நடந்தும், வாகனங்களில் பயணித்தும் அதிக தொகை கொடுத்து பொருட்களை வாங்கினர்.

கடந்த ஒருவாரமாக பலத்த மழை பெய்ததால் மலைவாழ் மக்கள் கிராமங்களை விட்டு வெளியேற இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட முக்கிய பண்டிகையான ஓணம் கொண்டாட இயலாத நிலை ஏற்பட்டது.அதுகுறித்து கிரிஜன் சொசைட்டி செயலாளர் அன்வர் கே.அஷிஸ் கூறுகையில், 'இடமலைகுடி செல்லும் ரோடு சேதமடைந்ததால் ஜீப்புகளில் குறைவாக பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகிறது. அவை ஒரு கடைக்குக் கூட போதாது. ரோடு சீரமைக்கப்பட்ட பின் நிலைமை சீராகும்.', என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X