மேகமலையில் சாரலுடன் பனிமூட்டம்; சுற்றுலா பயணிகளுக்கு வேண்டுகோள்

Added : செப் 10, 2022 | |
Advertisement
கம்பம் : மேகமலையில் பனிமூட்டம், சாரல் மழை தொடர்வதால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களில் செல்ல போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மேகமலையில் இயற்கை எழில் கொஞ்சும் தேயிலை தோட்டங்கள், மலை முகடுகளை தழுவிச்செல்லும் மேக கூட்டங்கள் இதனிடையே உலா வரும் யானை கூட்டங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் மேகமலையின் அழகை வாகனங்களில் சென்றவாறு பார்த்து ரசிக்க மணலாறு அணை,
மேகமலையில் சாரலுடன் பனிமூட்டம்; சுற்றுலா பயணிகளுக்கு வேண்டுகோள்

கம்பம் : மேகமலையில் பனிமூட்டம், சாரல் மழை தொடர்வதால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களில் செல்ல போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேகமலையில் இயற்கை எழில் கொஞ்சும் தேயிலை தோட்டங்கள், மலை முகடுகளை தழுவிச்செல்லும் மேக கூட்டங்கள் இதனிடையே உலா வரும் யானை கூட்டங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் மேகமலையின் அழகை வாகனங்களில் சென்றவாறு பார்த்து ரசிக்க மணலாறு அணை, மகாராஜா மெட்டு என பல இடங்கள் உள்ளன. இங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்தாலும், ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முதல் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சாரலுடன் பனி மூட்டம் ரோடுகளை மறைக்கின்றன.

இதனால் எதிரில் வரும் வாகனங்களை பார்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் யானைகள் நடமாட்டம் உள்ளதால் அடிக்கடி ஹைவேவிஸ் ரோட்டை கிராஸ் செய்து செல்கிறது. எனவே சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களை எச்சரிக்கையுடன் செலுத்த போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக மலைப்பாதையில் கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X