வடமதுரை அருகே பெட்ரோல் குண்டுவீச்சு; புகார் வராததால் போலீசார் குழப்பம்

Added : செப் 10, 2022 | |
Advertisement
வடமதுரை : வடமதுரை அருகே சின்னரெட்டியபட்டி களத்து வீட்டை சேர்ந்த விவசாயி வேல்முருகன் 57,வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், இதன் தீயை தீயணைப்பு துறையினர் அணைத்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக புகார் வராததால் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.விவசாயி வேல்முருகன் குடும்ப உறுப்பினர்கள் பெங்களூரில் வசிக்க, இவர் மட்டும் இங்கு தங்கி விவசாய பணிகளை

வடமதுரை : வடமதுரை அருகே சின்னரெட்டியபட்டி களத்து வீட்டை சேர்ந்த விவசாயி வேல்முருகன் 57,வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், இதன் தீயை தீயணைப்பு துறையினர் அணைத்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக புகார் வராததால் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

விவசாயி வேல்முருகன் குடும்ப உறுப்பினர்கள் பெங்களூரில் வசிக்க, இவர் மட்டும் இங்கு தங்கி விவசாய பணிகளை கவனிக்கிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடப்பிரச்னை இருக்கும் நிலையில், நேற்று அதிகாலை இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்துள்ளனர்.

வேல்முருகனுக்கு காயம் ஏற்பட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.டி.எஸ்.பி., துர்காதேவி, இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் வீட்டை ஆய்வு செய்தனர். உடைந்த பீர் பாட்டில்கள், திரி கிடந்தன. ஆனால் போலீசார் நேற்று இரவு 7:00 மணி வரை வழக்கு பதிவு செய்யவில்லை. போலீசாரிடம் கேட்ட போது ,'நேற்று மாலை வரை புகார் வரவில்லை ,'என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X