போலீஸ் செய்திகள்...

Added : செப் 10, 2022 | |
Advertisement
பிளக்ஸ்: ஒருவர் மீது வழக்குதேனி: பழனிச்செட்டிபட்டி பிரபாகரன் 28. இவர் போலீசார் அனுமதி இன்றி பூதிப்புரம் பிரிவு முதல் பேரூராட்சி அலுவலகம் வரை ரோட்டில் இருபுறமும் மணமக்கள் புகைபடம், பெயரிட்ட பிளக்ஸ் பேனர்களை இடையூறாகவும், பொது அழகை சீர்குலைக்கும் வகையில் வைத்திருந்தார். பிரபாகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.மழை நீர் குட்டையில் விழுந்தவர்



பிளக்ஸ்: ஒருவர் மீது வழக்கு

தேனி: பழனிச்செட்டிபட்டி பிரபாகரன் 28. இவர் போலீசார் அனுமதி இன்றி பூதிப்புரம் பிரிவு முதல் பேரூராட்சி அலுவலகம் வரை ரோட்டில் இருபுறமும் மணமக்கள் புகைபடம், பெயரிட்ட பிளக்ஸ் பேனர்களை இடையூறாகவும், பொது அழகை சீர்குலைக்கும் வகையில் வைத்திருந்தார். பிரபாகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மழை நீர் குட்டையில் விழுந்தவர் பலி
தேனி: கோம்பை தேரடி வீதி ராஜா 52. குடிபோதையில அடிக்கடி ரோட்டில் விழுவதும், வீட்டில் உள்ளவர்கள் அழைத்து வருவது வழக்கம். கடந்த செப்.7ல் கோம்பை மங்கம்மாள் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றவர், அங்குள்ள பாலத்தின் அடியில் உள்ள மழைநீர் குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி பலியானார். கோம்பை போலீசார் விசாரிக்கின்றனர்.

பஸ், வேன் மோதல்: ஒருவர் பலி
ஆண்டிபட்டி:- குமுளியில் இருந்து நேற்று மாலை 4:00 மணிக்கு அரசு பஸ் மதுரை நோக்கி சென்றது. ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் விலக்கு அருகே சென்ற போது, எதிரே அருப்புக்கோட்டையில் இருந்து நூல் ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி நோக்கி வந்த வேனுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் வேன் கவிழ்ந்தது. வேனில் பயணம் செய்த அருப்புக்கோட்டையை சேர்ந்த சங்கரநாராயணன், 60, படுகாயம் அடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பஸ்சில் பயணம் செய்த 15க்கும் ஏற்பட்டவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
கம்பம்: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி தங்கமணி 48. இவர் நேற்று முன்தினம் கம்பம் இலாஹி ஒரியண்டல் பள்ளி அருகே கட்டட வேலை செய்து கொண்டிருந்த போது, மின்சார ஒயர் உரசியது. உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். கம்பம் அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X