தொடரும் மழையால் விவசாயிகள் கலக்கம்; வழக்கத்தைவிட கொட்டித் தீர்க்குது

Added : செப் 10, 2022 | |
Advertisement
தியாகதுருகம்-வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்ப்பதால்நெல், கரும்பு தவிர்த்து மற்ற பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவமழை சீராக பெய்யும் தருணங்களில் விவசாயம் கை கொடுத்து தானிய உற்பத்தி அதிகரிக்கிறது. நெல், கரும்பு ஆகிய நன்செய் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.கோமுகி,
தொடரும் மழையால் விவசாயிகள் கலக்கம்; வழக்கத்தைவிட கொட்டித் தீர்க்குது

தியாகதுருகம்-வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்ப்பதால்நெல், கரும்பு தவிர்த்து மற்ற பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவமழை சீராக பெய்யும் தருணங்களில் விவசாயம் கை கொடுத்து தானிய உற்பத்தி அதிகரிக்கிறது. நெல், கரும்பு ஆகிய நன்செய் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.கோமுகி, மணிமுத்தா அணைகளும் 614 ஏரிகளும் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்குகிறது.

மரவள்ளி, மஞ்சள், வேர்க்கடலை உள்ளிட்ட நன்செய் பயிர்களும் உளுந்து, மக்காச்சோளம், பருத்தி, கம்பு ஆகிய புன்செய் பயிர்களும் விவசாயி களுக்கு கை கொடுக்கிறது.சில ஆண்டுகளாக பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மழை சீராக பெய்வதில்லை. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பயிர் அறுவடை தருணத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிர்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியது.அதைத் தொடர்ந்து 2017ம் ஆண்டு பருவமழை பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் சரிவை சந்தித்தது.

அதேபோல் கடந்த 2 ஆண்டுகளாக மழையளவு அதிகரித்து பயிர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.கடந்த ஆண்டு பெய்த கன மழையால் விளை நிலங்களில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி உளுந்து, பருத்தி, மரவள்ளி ஆகிய பயிர்கள் அழுகின.இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து கொட்டித் தீர்த்து வருகிறது.மாவட்டத்தில் அதிக மழைப் பொழிவைக் கொடுக்கும் வடகிழக்கு பருவமழை துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பள்ளமான இடத்தில் எல்லாம் தண்ணீர் தேங்கி இருப்பதைக் காண முடிகிறது.

தற்போதைய நிலையில் கோமுகி அணை நிரம்பி வழிகிறது. தென்பெண்ணை ஆற்றின் இரு கரைகளை தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மணிமுக்தா அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.தடுப்பணைகள் நிரம்பி வழிவதால் 50க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது தென்மேற்குப் பருவ மழை வழக்கத்தை விட 3 மடங்கு அதிகம் பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைப்பொழிவு மேலும் அதிகரிக்கும் என்பதால் பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துமோ என்ற கலக்கம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.கனமழை பெய்யும் போது விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X