உசிலை கல்லுாரியில் மாணவர்கள் போராட்டம்| Dinamalar

உசிலை கல்லுாரியில் மாணவர்கள் போராட்டம்

Added : செப் 10, 2022 | |
உசிலம்பட்டி : 'உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க மறுப்பதாக' மாணவர்கள், பேராசிரியர்கள், சீர்மரபினர் நலச்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கல்லுாரியில் அதிக கட்டணம் வசூல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தாண்டு கல்லுாரியில் முதலாம்

உசிலம்பட்டி : 'உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க மறுப்பதாக' மாணவர்கள், பேராசிரியர்கள், சீர்மரபினர் நலச்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லுாரியில் அதிக கட்டணம் வசூல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தாண்டு கல்லுாரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவ, மாணவியர் 600 பேரிடம் தற்போது வரை கல்லுாரி சார்பில் கட்டணம் வசூல் செய்யவில்லை.



மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து மதுரை காமராஜ் பல்கலையில் மாணவர்களின் பட்டியலை ஒப்படைத்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும். வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி கட்டணம் வசூல் செய்யாததால் வரவுள்ள முதல் பருவ தேர்வை மாணவர்கள் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நேற்று காலை 11:00 மணிக்கு பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், சீர் மரபினர் நலச்சங்கத்தினர், விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் போராட்டம் நடத்த கல்லுாரியில் இருந்து வெளியேறினர்.



அவர்களை இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். கல்லுாரி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தினரிடம் பேச்சு நடத்தினர். கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை விட்டுவிட்டு கட்டணம் செலுத்த சென்றனர்.அனுமதியின்றி மாணவர்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ராஜேந்திரன், சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகி தவமணிதேவி, தென்னிந்திய நதிகள் ஒருங்கிணைப்பு குழு மாநில ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X