க்யூட்' நுழைவுத் தேர்வு: செப்., 15ல் 'ரிசல்ட்'

Updated : செப் 10, 2022 | Added : செப் 10, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி-'மத்திய பல்கலைகளில் இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நடந்த, 'க்யூட்' நுழைவுத் தேர்வு முடிவுகள், வரும் 15ல் வெளியாகும்' எனஅறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய பல்கலைகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு, 'க்யூட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான நுழைவுத் தேர்வுகள், ஜூலையில் துவங்கி, கடந்த மாதம் இறுதியில் முடிவடைந்தன. இந்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-'மத்திய பல்கலைகளில் இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நடந்த, 'க்யூட்' நுழைவுத் தேர்வு முடிவுகள், வரும் 15ல் வெளியாகும்' எனஅறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



மத்திய பல்கலைகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு, 'க்யூட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான நுழைவுத் தேர்வுகள், ஜூலையில் துவங்கி, கடந்த மாதம் இறுதியில் முடிவடைந்தன. இந்த தேர்வுகளை, தேசிய தேர்வு முகமை நடத்தியது.

இது குறித்து, பல்கலை மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது:இளநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு முடிவுகள், வரும் 15ல் வெளியிடப்படும். இதற்கான ஏற்பாடுகள் குறித்து, தேசிய தேர்வு முகமை ஆய்வு செய்து வருகிறது.மத்திய பல்கலைகள் அனைத்தும், தேர்வு முடிவுகள் அடிப்படையில், சேர்க்கைக்கான நடவடிக்கைகளை உடனடியாக துவங்க வேண்டும்.


latest tamil news



இதற்காக, சம்பந்தப்பட்ட பல்கலைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.மாணவர் சேர்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும், ஆக., 20க்குள் முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக, தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டதுடன், பல கட்டங்களாகவும் நடத்தப்பட்டன. இதன் காரணமாக, முடிவுகள் வெளியாவது தாமதமாகி விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
10-செப்-202208:50:47 IST Report Abuse
duruvasar மகேஷ் பொய்யாமொழி ஏர்கனவே நீட் ரிசல்ட்டு போது...நெருப்பை கட்டிக்கிட்டாரு , இந்த ரிசுலேட்டுக்கு வேற யாராவது கட்டிக்க ஸ்டாலின் ஆணை பிறப்பிக்கவேண்டும் . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X