கடல் சார்ந்த உணவு ஏற்றுமதியில் இந்தியா உலகிலேயே முதலிடம்: மத்திய அமைச்சர்

Updated : செப் 10, 2022 | Added : செப் 10, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
நாமக்கல் : 'கடல் மற்றும் கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில், இந்தியா உலகிலேயே முதலிடத்தில் உள்ளது,'' என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை இணை அமைச்சர் முருகன் கூறினார்.இதுகுறித்து அவர் நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல்லுக்கு என பிரத்யேகமாக, தேசிய பால்வள வாரியம் வழங்கும் கடன் உதவியுடன், 89 கோடி ரூபாய்
LMurugan, Fisheries, Seafood, கடல் உணவு, அமைச்சர் முருகன், மீன்வளம்,  Minister Murugan,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாமக்கல் : 'கடல் மற்றும் கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில், இந்தியா உலகிலேயே முதலிடத்தில் உள்ளது,'' என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை இணை அமைச்சர் முருகன் கூறினார்.

இதுகுறித்து அவர் நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல்லுக்கு என பிரத்யேகமாக, தேசிய பால்வள வாரியம் வழங்கும் கடன் உதவியுடன், 89 கோடி ரூபாய் மதிப்பில், புதிய ஆவின் பால் பண்ணை அமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, 64 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆவின் பால் பண்ணை அமைக்க நிலம் கிடைத்தவுடன், 18 மாதத்தில், ஆவின் பால் பண்ணை அமைக்கப்படும். இதன்மூலம் பால் சுத்திகரிப்பு, பால் உப பொருட்கள் தயாரிப்பு மேம்படும்.

நாமக்கல் மாவட்டத்தில், பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். வேலை வாய்ப்பு, பொருளாதாரம் உயரும். 'ராஷ்ட்ரிய கோகுல் மிஷின்' திட்டத்தில், பண்ணையாளர்கள், தனிநபர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் ஒவ்வொருவரும், 200 நாட்டு பசு மாடுகள் வளர்க்க, மத்திய அரசு, 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. கடனுதவியும் வழங்கப்படுகிறது. அதன் மூலம், ஒவ்வொரு அமைப்பினரும், நான்கு கோடி ரூபாய் மதிப்பில், நாட்டு பசு வளர்க்கலாம். இதற்காக, 53 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


தேசிய மீன்வளவாரியத்தில், 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்துக்கு மட்டும், 1,800 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இதன்மூலம் திருவள்ளூர், திருவொற்றியூர், நாகை, விழுப்புரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில், மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்துதல், மீன் சந்தைகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடல் மற்றும் கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில், இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது.

மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்ததுபோல், கொச்சின், சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப், (பெட்டுவா காட்) மேற்குவங்கம் ஆகிய, ஐந்து மீன்பிடி துறைமுகங்கள், தலா, 100 கோடி ரூபாய் மதிப்பில், நவீனப்படுத்தப்பட உள்ளன. கடல்பாசி தொழிலை மேம்படுத்த, 120 கோடி ரூபாய் மதிப்பில், ராமேஸ்வரத்தில், திட்டத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது.

நாடு முழுவதும், கால்நடைகளை பாதுகாக்க, கோமாரி நோய் தடுப்பூசி, 100 சதவீதம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல்லுக்கு தனியாக வானொலி நிலையம் தேவை ஏற்படும் பட்சத்தில், அதுகுறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
10-செப்-202210:30:47 IST Report Abuse
J. G. Muthuraj அந்த ஒரு ஏற்றுமதியை வச்சிக்கிட்டு நாட்டை முன்னேற்ற முடியுமா?...ரிசர்ச், டெவலோப்மன்ட், சயன்ஸ், டெக்னாலஜி...இந்த துறைகளில் இந்தியா ரொம்ப பின்தங்கி இருக்குண்ணே...
Rate this:
Cancel
10-செப்-202210:17:59 IST Report Abuse
அப்புசாமி பட்ஜெட் போட்டு ஒரு வருஷம் முடியப்போகுது. அடுத்த வருஷ பட்ஜெட்டுக்கு நிதியமைச்சர் ரெடியாயிட்டிருக்காரு. இவரை எப்போ 100 கோடிக்கு திட்டம் தீட்டி 5 மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்தப் போறாரு? பட்ஜெட்டெல்லாம் போடறதோட சரி. ஆளுகட்சி ஓக்கேன்னு சொல்லும். எதிர்கட்சிகள் அமளி செய்யும். ஒருத்தரும்.போன தடவை போட்ட பட்ஜெட் பத்தி கேள்வி கேக்க மாட்டார்கள். நம்ம லட்சணம் அவ்ளோதான்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
10-செப்-202208:11:23 IST Report Abuse
Sampath Kumar மாட்டு கரி ஏற்றுமதிலும் நம்பர் ஒன்னு நம்ம நாடுதான் சார் அதை மட்டும் வசதியா மறைத்து விட்டர்கள் அரசியில் எல்லாம் அரசியில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X