குளத்தில் மூழ்கி மாணவர் பலி: ரூ.7.60 லட்சம் இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : செப் 10, 2022 | |
Advertisement
மதுரை: உண்டு, உறைவிட தடகள பயிற்சிக்கு சென்ற மாணவர் குளத்தில் மூழ்கி பலியானதற்கு ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம் மகேஸ்வரி தாக்கல் செய்த மனு:எனது மகன் ஆனந்த கிருஷ்ணன் 14. 8 வது வகுப்பு படித்தார். விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் 2013 ல் நடத்திய உண்டு, உறைவிட தடகள பயிற்சியில் பங்கேற்றார். பயிற்சி

மதுரை: உண்டு, உறைவிட தடகள பயிற்சிக்கு சென்ற மாணவர் குளத்தில் மூழ்கி பலியானதற்கு ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம் மகேஸ்வரி தாக்கல் செய்த மனு:எனது மகன் ஆனந்த கிருஷ்ணன் 14. 8 வது வகுப்பு படித்தார். விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் 2013 ல் நடத்திய உண்டு, உறைவிட தடகள பயிற்சியில் பங்கேற்றார். பயிற்சி நிலைய வளாக குளத்தில் மூழ்கி எனது மகன் இறந்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. கடமை தவறிவிட்டார். அவரது அலட்சியத்தால் சம்பவம் நடந்துள்ளது.

மகன் இறந்த அதிர்ச்சியில் எனது கணவரும் இறந்தார். மகன் இறந்ததற்கு பொறுப்பேற்று இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஆர்.விஜயகுமார்:சம்பந்தப்பட்ட விளையாட்டு அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. அவருக்கு 2 அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டது.

திண்டுக்கல்லுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என அரசு தரப்பு தெரிவித்தது. மனுதாரருக்கு ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீடு தொகையை 6 சதவீத வட்டியுடன் வழங்க பள்ளிக் கல்வித்துறை செயலர், கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X