காங்., தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை: சசிதரூர் உள்ளிட்ட காங்., எம்.பி.,க்கள் கடிதம்

Updated : செப் 10, 2022 | Added : செப் 10, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
புதுடில்லி:'' காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை நிலவ வேண்டும் எனவும், தகுதியுள்ள வேட்பாளர்களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும் '' என காங்கிரஸ் தேர்தல் நடத்தும் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு, சசிதரூர், கார்த்தி உள்ளிட்ட எம்.பி.,க்கள் கடிதம் எழுதி உள்ளனர்.இது தொடர்பாக, சசிதரூர், மணிஷ் திவாரி, கார்த்தி, பிரத்யுத்
Shashi Tharoor, MPs  Transparency, Congress, President Poll,

புதுடில்லி:'' காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை நிலவ வேண்டும் எனவும், தகுதியுள்ள வேட்பாளர்களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும் '' என காங்கிரஸ் தேர்தல் நடத்தும் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு, சசிதரூர், கார்த்தி உள்ளிட்ட எம்.பி.,க்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

இது தொடர்பாக, சசிதரூர், மணிஷ் திவாரி, கார்த்தி, பிரத்யுத் பர்தோலி , அப்துல் காலிக் ஆகியோர் எழுதிய கடிதம்: காங்கிரஸ் தலைவர் தேர்தல் நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்படுவது அவசியம். அது குறித்து எங்களுக்கு கவலை உள்ளது. ஆகவே, தேர்தலில் யாரெல்லாம் ஓட்டுப்போடலாம், தகுதிவாய்ந்தவர்கள் யார் என்பது குறித்த வாக்காளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட வேண்டும். இந்த பட்டியலை வெளிப்படையாக அறிவித்தால் தான் வேட்பாளர்களுக்கும் தேர்ந்தெடுப்போருக்கும் தெளிவான முடிவு எடுக்க முடியும்.


latest tamil newsவேட்பாளர்கள், நாடு முழுவதும் உள்ள 28 பிரதேச காங்கிரஸ கமிட்டிகளுக்கம், 9 யூனியன் பிரதேசங்களுக்கும் சென்ற வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மையும், நியாயமாக நடப்பதையும் நினைத்து கவலைப்படுகிறோம். கட்சியில் வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்ற எங்களது கோரிக்கைக்கு தவறான விளக்கம் அளிக்கப்படுவது வருத்தமளிக்கிறது.

கட்சியின் எந்தவொரு, உள் ஆவணமும், அதில் உள்ள தகவல்களை தவறாக பயன்படுத்த விரும்புபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வெளியிடுங்கள் என நாங்கள் ஆலோசனை தரவில்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வதற்கு முன், கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் குழு, பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். பட்டியலை வழங்கினால், தேர்தல் பணியில் இருந்து தன்னிச்சையான செயல்கள் அகற்றப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GANESUN - Delhi,இந்தியா
10-செப்-202221:35:02 IST Report Abuse
GANESUN ஒவ்வொரூ "காரிய" கமிட்டி முடியும் போதும் சிலர் எள்ளு தண்ணிவிட்டு வெளிய வர்றாங்க அப்படியும் இந்த மதுரகாரர் மாதிரி சில பேர் முட்டு குடுத்துதான் வர்றாங்க..
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
10-செப்-202220:45:19 IST Report Abuse
sankaranarayanan சசிதரூரூ நீ சமத்தா காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு அல்லது குஜ்ராத்திலிருந்து கொல்கொத்தாவாகவாது பாத யாத்திரை செல்லப்பா. உனக்கும் ஒரு மஹா கூட்டம் இருக்கு. கவலைப்படாம இரு வெற்றி உனக்கேதான்.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
10-செப்-202216:32:49 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN பாகிஸ்தான் பெண்ணுடனான தனது கள்ளக்காதலை தட்டிக்கேட்ட ஊட்டுக்காரியை யமனுலகு அனுப்பின இவன் பேச வந்துட்டான் ....
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
11-செப்-202200:19:10 IST Report Abuse
சாண்டில்யன்நாட்ல கள்ளக்காதல் கணவன் மனைவியை அல்லது மனைவி கணவனை கொலை செய்தல் நடப்பதேயில்லை அதுபோன்ற செய்திகளை ஊடகங்களில் எங்காவது என்றாவது கண்டதுண்டா இங்கே ஆணும் பெண்ணும் கற்புக்கரசர்களாக உலகுக்கே எடுத்துக் காட்டாக வாழ்கிறார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X