பள்ளி மாணவர்களுக்கு 'குடை' ; தலைமை ஆசிரியர் அசத்தல்

Added : செப் 10, 2022 | |
Advertisement
கிள்ளை: சிதம்பரம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் 803 பேருக்கு, தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில், குடை வழங்கினார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மணிவாசகன். இவர், மழைக் காலங்களில் மாணவர்கள் பள்ளிக்கு தவறாமல் வர வேண்டும் என்பதற்காக, தனது சொந்த செலவில், 803 பேருக்கு குடைகள் வழங்கினார்.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு
பள்ளி மாணவர்களுக்கு 'குடை' ; தலைமை ஆசிரியர் அசத்தல்

கிள்ளை: சிதம்பரம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் 803 பேருக்கு, தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில், குடை வழங்கினார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மணிவாசகன். இவர், மழைக் காலங்களில் மாணவர்கள் பள்ளிக்கு தவறாமல் வர வேண்டும் என்பதற்காக, தனது சொந்த செலவில், 803 பேருக்கு குடைகள் வழங்கினார்.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மணிவாசகன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியரின் தாய் சேதுமணி வேணுகோபால் மாணவர்களுக்கு குடைகளை, வழங்கினார்.

ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியன், சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கஸ்துாரி ஆகியோர் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி பேசினர். ஆசிரியர்கள் சந்திரசேகர், பிரவீன், சிவக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X