கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: சேர்மன் உறுதி

Added : செப் 10, 2022 | |
Advertisement
பண்ருட்டி: பண்ருட்டி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் தெய்வசிகாமணி, சுதா, துணை சேர்மன் தேவகிஆடலரசன், துணை பி.டி.ஓ.,க்கள் பாண்டியன் ராஜா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:தனபதி (தி.மு.க.,): மேலிருப்பு முடவன்காலனி ஆழ்துளை கிணறு அமைப்பது குறித்து தகவல் இல்லை. செம்மேடு கிராமத்தில் சிமென்ட்
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: சேர்மன் உறுதி

பண்ருட்டி: பண்ருட்டி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் தெய்வசிகாமணி, சுதா, துணை சேர்மன் தேவகிஆடலரசன், துணை பி.டி.ஓ.,க்கள் பாண்டியன் ராஜா முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:தனபதி (தி.மு.க.,): மேலிருப்பு முடவன்காலனி ஆழ்துளை கிணறு அமைப்பது குறித்து தகவல் இல்லை. செம்மேடு கிராமத்தில் சிமென்ட் சாலை அமைத்து தரவேண்டும்.ராமகிருஷ்ணன் (த.வா.க.,): பாவைக்குளம் கிராமத்தில் 20 ஆண்டுகளாக சுடுகாட்டு பாதையில்லை. சாலை ஆக்கிரமிப்பு அகற்றி, புதிய சாலை அமைத்து தரவேண்டும். சிறுதொண்டமாதேவி, வேகாக்கொல்லை சாலை அமைத்து தரவேண்டும். வேகாக்கொல்லை டாஸ்மாக் கடை அகற்ற வேண்டும்.

விஜயதேவி தேவராசு (த.வா.க.,): சிறுவத்துாரில் பள்ளி கழிவறை பழுது நீக்கம் செய்து தர வேண்டும். வையாபுரிபட்டினம் பள்ளிக்கு காம்பவுன்ட் அமைத்து தரவேண்டும்.உமா (தி.மு.க.,): முத்தாண்டிக்குப்பத்தில் பள்ளி கட்டடம் அமைத்து தர வேண்டும்.கல்யாணசுந்தரம் (அ.தி.மு.க.,): சிலம்பிநாதன்பேட்டையில் துணை சுகாதார நிலையம் கட்ட வேண்டும். பாலுார் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றியவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.

பத்திரக்கோட்டை ரேஷன்கடை பழுதுநீக்கம் செய்து தரவேண்டும்.அருள்முருகன் (தி.மு.க.,): காட்டுக்கூடலுார் சாலையில் சொரத்துங்குழி பள்ளி கட்டடம் சுற்றுசுவர் கட்டித்தர வேண்டும். போர்வெல் அமைத்து தரவேண்டும். மேட்டுக்குப்பத்தில் போர்வெல், வல்லம் அங்கன்வாடி கட்டடம் கட்டித்தர வேண்டும்.சேர்மன்: கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக வளர்ச்சி பணிகள் செய்ய முடியவில்லை. தற்போது அரசிடம் இருந்து நிதிகள் வரதுவங்கியுள்ளது. நிதி ஆதாரம் சீராகி வருவதால் விரைவில் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X