இன்போசிஸ், டி.சி.எஸ்., எச்.சி.எல்., - முதலீட்டுக்கு ஏற்ற நிறுவனம் எது?

Updated : செப் 10, 2022 | Added : செப் 10, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பொருளாதார மற்றும் அரசியல் பிரச்னைகள் காரணமாக இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனப் பங்குகளான இன்போசிஸ், டி.சி.எஸ்., மற்றும் எச்.சி.எல்., பாதிப்படைந்துள்ளன. ரஷ்யா-உக்ரைன் போர், பொருளாதார மந்தநிலை, ஐடி நிறுவனங்கள் வருவாய் குறையும் என்கிற கண்ணோட்டம் போன்றவற்றால் ஐடி பங்குகள் சரிவில் உள்ளன. இந்திய முன்னணி ஐடி நிறுவனங்களும் இப்பிரச்னையில் இருந்து தப்பவில்லை. உலகளவில்
HCL, Infosys, TCS, ITstocks, ஐடிபங்குகள், நிஃப்டி, சென்செக்ஸ்

பொருளாதார மற்றும் அரசியல் பிரச்னைகள் காரணமாக இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனப் பங்குகளான இன்போசிஸ், டி.சி.எஸ்., மற்றும் எச்.சி.எல்., பாதிப்படைந்துள்ளன. ரஷ்யா-உக்ரைன் போர், பொருளாதார மந்தநிலை, ஐடி நிறுவனங்கள் வருவாய் குறையும் என்கிற கண்ணோட்டம் போன்றவற்றால் ஐடி பங்குகள் சரிவில் உள்ளன.

இந்திய முன்னணி ஐடி நிறுவனங்களும் இப்பிரச்னையில் இருந்து தப்பவில்லை. உலகளவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள டிசிஎஸ், இன்போசிஸ், எச்.சி.எல்., ஆகியவற்றின் பங்குகள் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து கடும் வீழ்ச்சியில் உள்ளன. இன்போசிஸ் பங்குகள் 20%, டி.சி.எஸ்., டி.சி.எஸ்., 15%, எச்.சி.எல்., எச்.சி.எல்., 28% சரிந்துள்ளன. தற்போதைய பொருளாதார மந்தநிலையின் அழுத்தம் காரணமாக ஒட்டுமொத்த ஐடி குறியீடும் சிகப்பில் உள்ளன. மும்பை பங்குச்சந்தையின் ஐடி குறியீடு இந்தாண்டு 25% வீழ்ந்துள்ளது. நிப்டி ஐடி குறியீடு 2022ல் 29% குறைந்துள்ளது. ஐடி நிறுவனங்களின் முதல் காலாண்டு முடிவுகளில் லாப விகிதம் குறைந்துள்ளது. எதிர் வரும் காலாண்டுகளிலும் இந்த பிரதிபலிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news


இந்நிலையில் தற்போதைய சந்தை போக்கில் இன்போசிஸ், டிசிஎஸ்., எச்.சி.எல்., பங்குகள் குறித்து நிபுணர்கள் கூறியுள்ள கருத்துக்களை பார்ப்போம். “ஐடி பங்குகளில் உலகளவில் பெரியளவில் விற்பனை நடந்துள்ளது. இதனால் இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் உடைய இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் கூட மறுமதிப்பீட்டிற்கு வழிவகுத்தது. இன்போசிஸ் பங்கை பொறுத்தவரை ரூ.1,445 வலுவான ஆதரவு நிலையாக உள்ளது. இப்பங்கு ரூ.1,520ஐ தாண்டினால் அடுத்ததாக ரூ.1,630 - ரூ.1,700 விலை வரை செல்லும். எச்.சி.எல்., பங்குகளிலும் அதிக விற்பனை நடந்துள்ளது. ரூ.900 என்பது அதன் ஆதரவு நிலையாக உள்ளது. ரூ.960ஐ தாண்டினால் ரூ.1,025 - ரூ.1,150 என்ற டார்கெட்டை எட்டக்கூடும்.” என டிப்ஸ் டூ டிரேட்ஸ் துணை நிறுவனர் பவித்ரா செட்டி தெரிவித்தார்.


latest tamil news


ஆஷிகா பங்கு வர்த்தக நிறுவனத்தின் ஐடி துறை நிபுணர் சிராக் கச்சாடியா கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில், ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் இன்போசிஸ் டிசிஎஸ்-ஐ விஞ்சியது. வருவாய் வளர்ச்சி ஒரு சவாலாக இல்லை என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்பத் துறைக்கும் மார்ஜின் பிரஷர் உள்ளது. எனவே, இத்தகைய நிச்சயமற்ற நேரத்தில் ரிஸ்க் ரிவார்டு மற்றும் நிறுவன மதிப்பின் அடிப்படையில் சாதகமாக விளங்கும் ஐடி துறையின் தலைவரான இன்போசிஸில் முதலீடு மேற்கொள்வது நல்லது. இவ்வாறு கூறினார்.

யுனிவெஸ்ட் பங்கு தரகு நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் கேத்தன் கூறியதாவது: மூன்று ஐடி நிறுவனங்களில் இன்போசிஸ் ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டமாகத் தெரிகிறது. 2023 முதல் காலாண்டு முடிவுகளின்படி இன்போசிஸ் வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23.57 சதவீதமாக இருக்கிறது. இது மற்ற இரு நிறுவனங்களை விட அதிகம். கடந்த ஐந்து முதல் மூன்று ஆண்டுகளில் அதிக வருமானத்தை அளித்திருப்பதும் இன்போசிஸ் தான். நிலையான செயல்திறனுடன், இன்போசிஸ் மற்ற நிறுவனங்களை விஞ்சும் ஆற்றல் கொண்டுள்ளது. நடுத்தர கால அளவில் இன்போசிஸ் பங்கு ரூ.1,900 என்ற முந்தைய உச்சநிலைக்கு செல்லக்கூடும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
10-செப்-202216:30:49 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN மூன்றிலும் ஒரு சேர முதலீடு செய்வதும் தவறு ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X