பித்ருக்களின் ஆசி கிடைக்கும் மகாளய பட்சம் இன்று துவக்கம்

Added : செப் 10, 2022 | |
Advertisement
முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசி கிடைக்க உகந்த காலமான மகாளய பட்சம், இன்று துவங்குகிறது.மகாளய பட்சம் என்பது முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக கருதப்படுகிறது. மாதம்தோறும் முன்னோருக்கு அமாவாசை திதி கொடுக்க மறந்தவர்கள், முடியாதவர்கள், மகாளய பட்சத்தில் திதி கொடுப்பதால், 12 மாதங்களிலும் திதி கொடுத்ததற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.புரட்டாசி மாதத்தில்

முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசி கிடைக்க உகந்த காலமான மகாளய பட்சம், இன்று துவங்குகிறது.மகாளய பட்சம் என்பது முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக கருதப்படுகிறது.

மாதம்தோறும் முன்னோருக்கு அமாவாசை திதி கொடுக்க மறந்தவர்கள், முடியாதவர்கள், மகாளய பட்சத்தில் திதி கொடுப்பதால், 12 மாதங்களிலும் திதி கொடுத்ததற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய 15 நாட்களும் மகாளய பட்ச காலம்.

இதில், பக்ஷம் என்பது 15 நாட்களை குறிக்கும். புரட்டாசி பவுர்ணமியில் துவங்கி அமாவாசை உள்ள 15 நாட்களே மகாளய பட்சம் என அழைக்கப்படுகிறது. இந்தாண்டு, ஆவணி மாத பவுர்ணமியிலேயே மகாளயம் துவங்குகிறது. ஒவ்வொரு மாத அமாவாசையிலும், நம் உறவினர்கள் 12 பேருக்கு மட்டுமே தர்ப்பணம் செய்கிறோம். இந்த மகாளய பட்சத்தில்தான், அனைத்து உறவினருக்கும் தர்ப்பணம் செய்யப்படுகிறது.

அந்த சிறப்பு மிக்க மகாளய பட்சம் இன்று துவங்குகிறது. 14ம் தேதி மகா பரணியும், 18ம் தேதி மத்தியாஷ்டமியும், 22ம் தேதி சன்யாஷ்டமியும், மகாளய அமாவாசை 25ம் தேதியும் தர்ப்பணம் கொடுக்க விசேஷ நாட்களாகும். சில பிரிவினருக்கு, நாளை முதல் மகாளய பட்சம் ஆரம்பிக்கிறது.
------ நமது நிருபர்-


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X