சுயசார்பு திட்டத்தை ஊக்குவிக்கும் மோடி

Added : செப் 10, 2022 | |
Advertisement
நாமக்கல்: ''இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள், உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி சுயசார்பு இந்தியா திட்டத்துக்கு ஊக்கம் அளித்து வருகிறார்,'' என, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் பேசினார். இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ், சென்னையில் செயல்பட்டு வரும், மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில், அறியப்படாத

நாமக்கல்: ''இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள், உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி சுயசார்பு இந்தியா திட்டத்துக்கு ஊக்கம் அளித்து வருகிறார்,'' என, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் பேசினார்.

இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ், சென்னையில் செயல்பட்டு வரும், மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின், ஐந்து நாள் புகைப்பட கண்காட்சி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று துவங்கியது.தி.மு.க., - எம்.பி., சின்ராஜ் தலைமை வகித்தார். மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன், கண்காட்சியை துவக்கி வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசியதாவது:பிரதமர் மோடி முயற்சியால், நாட்டின் முன்னேற்றத்தை நாம் உணர்கிறோம்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என்பதற்காக, பிரதமர், சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவித்து வருகிறார்.மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்களை ஊக்குவித்து வருகிறார். பிரதமரின் இதுபோன்ற செயல்பாடுகளால், உலகத்துக்கு வழிகாட்டும் நாடாக, நம் நாடு உயர்கிறது.இவ்வாறு அமைச்சர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X