செப்., 2ம் வாரத்தில் ரூ.1,600 கோடி திரட்டிய இந்திய ஸ்டார்ட்அப்கள்!

Updated : செப் 10, 2022 | Added : செப் 10, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதி சேர்வதில் கடந்த வாரத்தை காட்டிலும் செப்டம்பர் 2வது வாரம் சிறப்பாக அமைந்துள்ளது. செப்., 5 முதல் 9 வரையிலான இந்த வாரத்தில் 28 டீல்கள் மூலம் ரூ.1,600 கோடி நிதி சேர்ந்துள்ளது. கடந்த வாரத்தை காட்டிலும் இது 25 சதவீதம் அதிகம். மருந்து டெலிவெரி நிறுவனமான டாடா 1 எம்.ஜி., நேத்ராடைன் ஆகியவை அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளன.இளைஞர்கள் வேலை தேடி அலைந்த
Startups, ஸ்டார்ட்அப், SEEDFUNDING, UnicornCompanies

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதி சேர்வதில் கடந்த வாரத்தை காட்டிலும் செப்டம்பர் 2வது வாரம் சிறப்பாக அமைந்துள்ளது. செப்., 5 முதல் 9 வரையிலான இந்த வாரத்தில் 28 டீல்கள் மூலம் ரூ.1,600 கோடி நிதி சேர்ந்துள்ளது. கடந்த வாரத்தை காட்டிலும் இது 25 சதவீதம் அதிகம். மருந்து டெலிவெரி நிறுவனமான டாடா 1 எம்.ஜி., நேத்ராடைன் ஆகியவை அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளன.

இளைஞர்கள் வேலை தேடி அலைந்த காலம் போய் தற்போது சில ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவம் பெற்றதும் சொந்தமாக ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கி வேலை தரும் அளவிற்கு வளர்கின்றனர். மத்திய அரசு ஸ்டார்ட்அப் இந்தியா என்ற கொள்கையை கொண்டு வந்தது, தொழில் முதலீடுகளுக்கு எளிய வழி ஏற்படுத்தியது, தொழில் நடத்துவதை எளிதாக்கி வருவது போன்றவை ஸ்டார்ட்அப்கள் பெருக காரணமாக உள்ளன. 100வது சுதந்திர தினத்தின் போது இந்தியா 25 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக வளர இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கு ஸ்டார்ட்அப்கள் முக்கிய பங்காற்றும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.


latest tamil news


இந்நிலையில் செப்டம்பர் 2ம் வாரத்தில் முதலீடுகளை ஈர்த்த ஸ்டார்ட்அப்கள் குறித்து பார்ப்போம். டாடாவின் ஆதரவு பெற்ற ஸ்டார்ட்அப்பான 1 எம்.ஜி., இந்த வார நிதி திரட்டல் மூலம் 100 கோடி டாலர் என்கிற சந்தை மதிப்பை எட்டிய 107வது இந்திய யுனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. மொபைல் செயலி மூலம் மருந்து டெலிவெரி செய்யும் வேலையை இந்நிறுவனம் செய்கிறது. ஹெல்த்டெக் துறையில் 5வது யுனிகார்னாக மாறியுள்ளது. டாடா டிஜிட்டல், எச்.பி.எம்., ஹெல்த்கேர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த வாரத்தில் டாடா 1 எம்ஜியில் ரூ.300 கோடி முதலீடு செய்துள்ளன.

மேலும் லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட்அப்பான நேத்ராடைனில் ரூ.480 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஐபஸ் எனும் பொழுதுபோக்கு தொழில்நுட்ப நிறுவனம், வாவ் மோமோ எனும் உணவு தொழில்நுட்ப நிறுவனம், அக்ஷயகல்பா எனும் ஆர்கனிக் உணவு நிறுவனம் ஆகியவை தலா ரூ.100 கோடி முதலீட்டை பெற்றுள்ளன.


latest tamil news


இவை தவிர க்ரோமோ எனும் நிதி தொழில்நுட்ப நிறுவனம், ஜிப்மேட் எனும் இ-காமர்ஸ் நிறுவனம், கேஷ்ப்ளோ எனும் கடன் வழங்கும் நிறுவனம், பவர்ப்ளே எனும் சாஸ் தொழில்நுட்பத்தை அடித்தளமாக கொண்ட நிறுவனம் ஆகியவை ரூ.50 முதல் ரூ.100 கோடி வரை நிதி பெற்றுள்ளன.

ஏய்கார்ட் எனும் விவசாய தொழில்நுட்ப நிறுவனம், லுசிடிட்டி எண்டர்பிரைசஸ் டெக், ஸ்டேவிஸ்டா எனும் தங்குமிட நிறுவனம், சூட்42 எனும் நிறுவனங்களுக்கான ஸ்டார்ட்அப், தால்சினி எனும் கடைகளுக்கான வென்டிங்மெஷின் போன்றவை வழங்கும் ஸ்டார்ட்அப் உள்ளிட்டவை ரூ.50 கோடி வரை நிதி பெற்றுள்ளன. அன்அகாடமி நிறுவனம் கேட் அகாடமி நிறுவனத்தை இந்த வாரம் கையகப்படுத்தியுள்ளது. இந்த வார பண்டிங் ரவுண்டில் பெட்டர் கேபிடல் மற்றும் டைட்டன் கேபிடல் நிறுவனங்கள் தலா 2 முதலீடுகளை மேற்கொண்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
10-செப்-202222:43:27 IST Report Abuse
தியாகு செப்., 2ம் வாரத்தில் ரூ.1,600 கோடி திரட்டிய இந்திய ஸ்டார்ட்அப்கள். ஸ்டார்ட் அப் கம்பெனிகளே, நீங்கள் திரட்டிய ரூ.1,600 கோடியை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளவும். கட்டுமர திருட்டு திமுகவின் உடன்பிறப்புகளுக்கு தெரியவந்தால் உங்களுக்கே தெரியாமல் ஆட்டையை போட்டுவிடுவார்கள். ஹி...ஹி...ஹி...
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
10-செப்-202221:49:44 IST Report Abuse
N.K அனைத்தும் சேவைத்துறை சார்ந்த ஸ்டார்டப்களாகவே இருக்கிறது. உற்பத்தி துறையில் முதலீடு செய்வது இன்றைக்கு நடக்குமோ.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
10-செப்-202220:18:54 IST Report Abuse
NicoleThomson ,,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X