வரலாற்றை ராகுல் படிக்க வேண்டும்: அமித்ஷா

Added : செப் 10, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவின் வரலாற்றை , காங்கிரஸ் எம்.பி., ராகுல் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கூறியுள்ளார்.பாதயாத்திரையின் போது ராகுல் அணிந்த 'டி-சர்ட் ' குறித்து பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ., தெரிவித்த விமர்சனத்திற்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது.இந்நிலையில், ராஜஸ்தானில் பா.ஜ,
rahul, rahulgandhi, amitshah, bjp, congress, rajasthan

புதுடில்லி: இந்தியாவின் வரலாற்றை , காங்கிரஸ் எம்.பி., ராகுல் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கூறியுள்ளார்.

பாதயாத்திரையின் போது ராகுல் அணிந்த 'டி-சர்ட் ' குறித்து பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ., தெரிவித்த விமர்சனத்திற்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானில் பா.ஜ, நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: வெளிநாட்டு டி-சர்ட் அணிந்து ராகுல், பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த நேரத்தில் பார்லிமென்டில் ராகுல் மற்றும் காங்கிரசார் பேசிய பேச்சை நினைவு கூர்கிறேன். அப்போது, இந்தியா என்பது நாடல்ல என ராகுல் கூறினார். இதனை எந்த புத்தகத்தில் படித்தார் என்பது தெரியவில்லை. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த நாடு இது. இந்தியாவின் வரலாற்றை ராகுல் படிக்க வேண்டும்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைத்த போதும், முதல்வர் அசோக் கெலாட் குறைக்கவில்லை. இந்தியாவில் எரிபொருள் விலை அதிகம் உள்ள மாநிலம் ராஜஸ்தான் ஆகும். மின்சார விலையும் அதிகம். பா.ஜ., ஆட்சிக்கு வரும் போது அனைத்து விலைகளும் குறைக்கப்படும். வளர்ச்சி பணிகள், பாலம் கட்டுமானம், அனைவருக்கும் மின்சாரம், வேலைவாய்ப்பை காங்கிரஸ் எப்போதும் வழங்காது. ஓட்டு வங்கி அரசியலையும், திருப்தி படுத்தும் அரசியலை மட்டும் தான் காங்கிரஸ் செய்கிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
11-செப்-202202:11:58 IST Report Abuse
John Miller வேலுமணியின் ஊழல் வழக்கில் அவருக்கு ஆதரவாக ஏன் மத்திய அரசு வக்கீல் ஆஜரான்கிறார் என்பதை முதலில் நீ சொல்.
Rate this:
Cancel
Venkatesan.v - Chennai,இந்தியா
11-செப்-202200:15:29 IST Report Abuse
Venkatesan.v Did you study anything ( not only the history) he lost his grandmother and father. Both of them developed many public sectors. You guys are selling it your corporate fris. The comedy is you bought the Indian National flag from china and talking about his foreign made T-shirt..
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
10-செப்-202222:21:54 IST Report Abuse
Sivagiri படிச்சு ? ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X