குலு மணாலி செல்ல பட்ஜெட் போதலையா? இருக்கவே இருக்கு கசோல்..!

Updated : செப் 11, 2022 | Added : செப் 10, 2022 | |
Advertisement
ஹனிமூன் தம்பதிகள், காதலர்களின் ஆதர்ச சுற்றுலாத் தலங்களில் ஒன்று குலு மணாலி. தமிழகத்தில் இருந்து ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள குலு மணாலி சென்றுவர இருவருக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். சீசன் காலமான ஆகஸ்ட் துவங்கி ஜனவரி வரை குலி மணாலியில் கூட்டம் நிரம்பி வழியும். அதிக டிமாண்ட் காரணமாக அப்போது அங்கு தங்கும் விடுதிகள், ரெஸ்டாரன்ட்களில் கட்டணம் சற்று
Kasol tour, Kullu district himalayas, Himachal Pradesh, கசோல் சுற்றுலா, இமயமலை சுற்றுலாத் தலம், ஹிமாசல பிரதேச மாநிலம், குலு மணாலி

ஹனிமூன் தம்பதிகள், காதலர்களின் ஆதர்ச சுற்றுலாத் தலங்களில் ஒன்று குலு மணாலி. தமிழகத்தில் இருந்து ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள குலு மணாலி சென்றுவர இருவருக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். சீசன் காலமான ஆகஸ்ட் துவங்கி ஜனவரி வரை குலி மணாலியில் கூட்டம் நிரம்பி வழியும்.

அதிக டிமாண்ட் காரணமாக அப்போது அங்கு தங்கும் விடுதிகள், ரெஸ்டாரன்ட்களில் கட்டணம் சற்று அதிகரிக்கக் கூடும். குலு மணாலி சென்றுவர ஆசை இருந்தும் அதற்கான பட்ஜெட் இல்லாதோருக்கு வெறும் 20 ஆயிரம் ரூபாயில் குலுவுக்கு 36 கி.மீ., தொலைவில் ஓர் பட்ஜெட் சுற்றுலாத் தலம் உள்ளது.


latest tamil newsபார்வதி நதிக்கரையில் பார்வதி பள்ளத்தாக்கின் நடுவே அமைந்துள்ள கசோல் கிராமம் குலுவுக்கு மிக அருகில் உள்ளது. குலு ரயில்வே நிலையத்தில் இருந்து இரண்டு மணி நேர டாக்ஸி பயணம் மூலம் இப்பகுதியை வந்தடையலாம்.


latest tamil newsசென்னை- டில்லி, விமான கட்டணம் ஒன்றுதான் என்றாலும் கசோல் ஆடம்பரமற்ற ஓர் அமைதி சுற்றூலாத் தலம் என்பதால் இங்கு பட்ஜெட் சுற்றுலாப் பயணிகள் அதிக பலன் அடைவர். குலுவுக்கு எந்தவகையிலும் குறைவில்லா சுற்றுலாப் பகுதிகள் கசோலில் அமைந்துள்ளன. இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இப்பகுதிக்கு வந்துசெல்வதால் கசோல், மினி இஸ்ரேல் என அழைக்கப்படுகிறது.


latest tamil newsகசோலில் மலா கிராமம், கீரெங்கா, டோஷ் பள்ளத்தாக்கில் டிரெக்கிங் செய்யலாம். இங்கு அமைந்துள்ள இஸ்ரேலிய ரெஸ்டாரெண்ட்களில் இஸ்ரேலிய பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடலாம்.
மூன் டான்ஸ் கஃபே உணவகம் கசோலில் மிகப் பிரபலமானது. மாலை வேளைகளில் இந்த கஃபேயில் உணவருந்திவிட்டு அருகே உள்ள மார்க்கெட்டில் சுற்றுலாப் பயணிகள் ஷாப்பிங் செய்யலாம். இங்கு தரமான குளிர் ஷால்கள், கைவினைப் பொருட்கள் கிடைக்கும். நாகர் கிராமத்தில் தூண்டிலில் மீன் பிடிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவர். இவற்றை அங்கேயே வருத்து சாப்பிடலாம். புகைப்பட விரும்பிகள் டிசம்பர் மாதத்தில் பனி படந்த இமயமலைக்குச் சென்று புகைப்படங்கள் எடுக்கலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X