மே.வங்க தொழில் அதிபர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.17 கோடி பறிமுதல்

Updated : செப் 10, 2022 | Added : செப் 10, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், 'மொபைல் கேம்' செயலி வாயிலாக பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில், தொழில் அதிபர் வீட்டில் இருந்து, 17 கோடி ரூபாயை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த தொழில் அதிபர் அமீர் கான். இவரும், இவரது மகனும், சில ஆண்டுகளுக்கு முன், மொபைல் கேம் செயலியை துவக்கினர். இதில் பலரிடமும் பண மோசடி நடந்ததாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், 'மொபைல் கேம்' செயலி வாயிலாக பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில், தொழில் அதிபர் வீட்டில் இருந்து, 17 கோடி ரூபாயை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.



latest tamil news



மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த தொழில் அதிபர் அமீர் கான். இவரும், இவரது மகனும், சில ஆண்டுகளுக்கு முன், மொபைல் கேம் செயலியை துவக்கினர். இதில் பலரிடமும் பண மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமீர் கான் மீது, அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று அமீர் கானுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோல்கட்டா உட்பட பல இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில், 17 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:சோதனையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இயந்திரங்கள் வாயிலாக பணத்தை எண்ணும் பணி தொடர்கிறது.


latest tamil news



இதுவரை 17 கோடி ரூபாய் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை 500 ரூபாய் நோட்டுகள். சோதனை தொடர்கிறது. அனைத்து இடங்களிலும் சோதனை முடிந்த பின், மொத்தம் எவ்வளவு தொகை பறிமுதல் செய்யப்பட்டது என்ற விபரம் தெரிய வரும். இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-செப்-202208:03:45 IST Report Abuse
राजा மமதை ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்....
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
10-செப்-202222:39:53 IST Report Abuse
தியாகு ஹி...ஹி...ஹி...இதென்ன பிரமாதம், போட்டோவில் இருப்பது போல பல மடங்கு பணம் எங்க கட்டுமர திருட்டு திமுகவின் வார்டு மெம்பரே வைத்திருப்பார்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
10-செப்-202222:37:55 IST Report Abuse
Ramesh Sargam சில மாதங்களுக்கு முன்பு மமதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஒருவர் வீட்டில் சோதனை செய்தபோது இப்படி கட்டுக்கட்டாக பணம் கிடைத்தது. இப்ப ஒரு தொழில் அதிபர் வீட்டில். இந்த ஊழலிலும் மம்தாவுக்கு பங்கு இருக்கலாம். நாட்டில் உள்ள பல ATM மையங்களில் எப்பொழுதும் NO CASH என்ற போர்டு வைக்கப்பட்டிருக்கும். இப்படி வொவொரு திருடர்கள் அதாவது ஊழல்வாதிகளிடம் கட்டுக்கட்டாக பணம் இருந்தால் ATM மையங்களில் எப்படி பணம் இருக்கும்...? யோசியுங்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X