சின்ன சின்னதாய்| Dinamalar

சின்ன சின்னதாய்

Added : செப் 10, 2022 | |
டவரில் சிக்கிய கழுகுகோலாரின் கராஞ்சிகட்டே என்ற இடத்தில் உள்ள ரிலையன்ஸ் டவரில் கழுகு ஒன்று சிக்கிக்கொண்டு பறக்க முடியாமல் தொங்கியபடி தத்தளித்தப் படி இருந்தது.கோலாரின் விலங்கு பாதுகாப்பு ஆர்வலர் ரவி, 40, என்பவர் டவர் மீது ஏறி, கழுகை காப்பாற்றினார். அதற்கு ஏற்பட்ட காயத்துக்கு மருந்து தடவி, கட்டுப்போட்டு வன விலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.விபத்தில் ஓய்வு பெற்றடவரில் சிக்கிய கழுகு

கோலாரின் கராஞ்சிகட்டே என்ற இடத்தில் உள்ள ரிலையன்ஸ் டவரில் கழுகு ஒன்று சிக்கிக்கொண்டு பறக்க முடியாமல் தொங்கியபடி தத்தளித்தப் படி இருந்தது.கோலாரின் விலங்கு பாதுகாப்பு ஆர்வலர் ரவி, 40, என்பவர் டவர் மீது ஏறி, கழுகை காப்பாற்றினார். அதற்கு ஏற்பட்ட காயத்துக்கு மருந்து தடவி, கட்டுப்போட்டு வன விலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சாவுபங்கார்பேட்டையின் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசந்திரப்பா 62, என்பவர்,மோட்டார் பைக்கில் அப்பேனஹள்ளி கிராமத்துக்கு சென்றுக்கொண்டிருந்தார். சாலை தடுப்பில் மோதி விழுந்துள்ளார். தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.10 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகாகோலாரில் 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றனர்.கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வெங்கட் ராஜு கூறுகையில், ''வரும் 17, 18 ஆகிய இரு நாட்கள் யோகா நடக்கிறது. இதில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க அனைத்து கல்லுாரிகள்,பள்ளிகள், இளைஞர் அமைப்புகள், ஆஷா பணியாளர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும். யோகா உடல் நலத்துக்கு நல்லது என்பதை அனைத்து துறையினரும் விளக்க வேண்டும்,'' என்றார்.அங்கன்வாடிக்கு புதிய கட்டடம்பங்கார்பேட்டையின் பூதிக்கோட்டை அருகே பொம்மகானஹள்ளி கிராமத்தில் அங்கன்வாடி கட்டடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.எந்த நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், மரத்தடியில் அங்கன்வாடி மையம் நடத்தி வந்தனர். இதுகுறித்து கிராம, தாலுகா பஞ்சாயத்துகள், வட்டார கல்வித்துறை அதிகாரிக்குபுகார் செய்தனர்.ஜில்லா பஞ்சாயத்து அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு புதிய அங்கன்வாடி கட்டடம் கட்ட 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினர்.மாணவர்கள் கலை விழாதங்கவயலின் சுந்தரபாளையம் கிராமத்தில் உள்ள உட்ஸ் இண்டர் நேஷனல் பள்ளியில் சுந்தர பாளையம் கிளஸ்டர் அளவிலான பள்ளி மாணவர்கள் கலை விழா நிகழ்ச்சிகள் நடந்தது. ஓவியம், கோலப்போட்டி, நாட்டியம், மாறு வேடம் போட்டி, கோலாட்டம், கும்மியாட்டம், நாட்டுப்புற பாடல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.செய்தியாளர்கள் தர்ணாபங்கார்பேட்டை டவுன் சபையின் மாதாந்திர கூட்டங்களில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பதை கண்டித்து செய்தியாளர் சங்கத்தினர் தர்ணா நடத்தினர். பங்கார்பேட்டை டவுன் சபை முன் தர்ணா நடத்தினர். பங்கார்பேட்டை தாசில்தார் தயானந்தா மூலம் கோலார் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அளித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X