சினி கடலை

Added : செப் 10, 2022 | |
Advertisement
படத்தை பார்க்க 'வெயிட்டிங்'தனஞ்செயா, ரசிதா ராம் இணைந்து நடித்துள்ள, மான்சூன் ராகா திரைப்படம், திட்டமிட்டபடி நடந்திருந்தால், ஆகஸ்ட் 19ல் திரைக்கு வந்திருக்க வேண்டும். தொழில்நுட்ப பணிகள் பாக்கியிருந்ததால், திரையிட முடியவில்லை. செப்டம்பர் 16ல், மாநிலம் முழுதும் திரைக்கு வருகிறது. பிரசார பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படக்குழுவினர் கூறுகையில், ''படத்தின்
சினி கடலைபடத்தை பார்க்க 'வெயிட்டிங்'

தனஞ்செயா, ரசிதா ராம் இணைந்து நடித்துள்ள, மான்சூன் ராகா திரைப்படம், திட்டமிட்டபடி நடந்திருந்தால், ஆகஸ்ட் 19ல் திரைக்கு வந்திருக்க வேண்டும். தொழில்நுட்ப பணிகள் பாக்கியிருந்ததால், திரையிட முடியவில்லை. செப்டம்பர் 16ல், மாநிலம் முழுதும் திரைக்கு வருகிறது. பிரசார பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படக்குழுவினர் கூறுகையில், ''படத்தின் ஒரு பாடல், 'யு - டியூப்'பில் வெளியிடப்பட்டது. பலரும் பாராட்டியுள்ளனர். படத்தை பார்க்க காத்திருப்பதாக கூறினர். பாடலில் தனஞ்செயா, ரசிதா ராம் பிரமாதமாக ஆட்டம் போட்டுள்ளனர். இதில் அச்யுத் குமார், சுஹாசினியும் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்,'' என்றார்.திரையரங்கில் விசிலடித்த ராகவேந்திராநாகேந்திர பிரசாத் இயக்கிய, லக்கிமேன் செப்டம்பர் 9ல், திரைக்கு வந்து சக்கை போடு போடுகிறது. இதில் புனித் ராஜ்குமார் கடவுளாக தென்படுகிறார். பெங்களூரின் நர்த்தகி திரையரங்கில், ராகவேந்திர ராஜ்குமார் தன் மனைவி, பிள்ளைகளுடன் படம் பார்த்தார். திரையில் தம்பியை கண்டு ஆரவாரமாக கைத்தட்டி, சிறுவனை போன்று விசிலடித்து மகிழ்ந்தார். அப்பு, அப்பு என கோஷமிட்டார். புனித்தின் நடனத்தை பார்த்து, ராகவேந்திரா மனைவி மங்களா, உணர்ச்சி வசத்தால் கண்ணீர் விட்டார். பத்து மாதங்களாக நர்த்தகி திரையரங்கு மூடப்பட்டிருந்தது. நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. திரையரங்கில் புனித் போட்டோ வைத்து பூஜித்தனர். பட்டாசு வெடித்து கொண்டாடினர்.பெண் இயக்குனர் ரியா என்ற பெயரில் திரைப்படம், சத்தமில்லாமல் படப்பிடிப்பு முடிந்து, திரைக்கு வர தயாராகிறது. ஆந்திராவை சேர்ந்த ஆசிரியை விஜயா நரேஷ், இந்த படத்தை இயக்குகிறார். அவரது கணவர் நரேஷ் தயாரிக்கிறார். கதை தொடர்பாக, அவர் கூறுகையில், ''இது ஒரு திகில் படமாகும். ரசிகர்களை இருக்கை நுனிக்கு அழைத்து வரும். ஒரே வீட்டில் 14 கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். இவர்களை சுற்றி, கதை நகர்கிறது. செப்டம்பர் 16ல் திரைக்கு வருகிறது. சாவித்திரி நாயகியாக நடிக்கிறார். ரியா கதாபாத்திரத்தில் பேபி அனன்யா நடித்துள்ளார்,'' என்றார்.புதிய ஆக் ஷன் ஹீரோயின்கன்னட திரையுலகில், ஆக்ஷன் ஹீரோக்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் ஆக்ஷன் ஹீரோயின்கள் மிகவும் குறைவு. மாலாஸ்ரீ, ஆயிஷா என, சிலர் மட்டுமே உள்ளனர். தற்போது கன்னடத்துக்கு, ரிதன்யா ஹூவன்னா என்ற புதிய ஆக்ஷன் ஹீரோயின் கிடைத்துள்ளார். அவரது நடிப்பில் மர்தினி திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. அறிமுகமாகும் முதல் படத்திலேயே, காக்கி உடை அணிந்து போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கதை பற்றி அவரிடம் கேட்ட போது, ''இது ஆக்ஷன் படமாகும். நேர்மையான பெண் போலீஸ் அதிகாரி, கடமையாற்றும் போது என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார். அதை எப்படி சமாளிக்கிறார், என்பதே கதையின் சாராம்சம்,'' என்றார்.இடது கை பழக்கம் உள்ளோர்நடிகர் திகந்த், காளிபடா -- 2 திரைப்பட வெற்றிக்களிப்பில் மிதக்கிறார். தற்போது இடகை அபகாதக்கே காரணா என்ற புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜோடியாக, நடிகை தனு ஹர்ஷா நடிக்கிறார். படப்பிடிப்பும் துவங்கப்பட்டுஉள்ளது. கதை பற்றி படக்குழுவினர் கூறுகையில், 'இடது கை பழக்கம் உள்ளவர்கள், பல தொந்தரவுகளை சந்திக்கின்றனர். உலகின் பல விஷயங்கள், வலது கை பயன்பாட்டுக்கு உதவியாக செய்யப்பட்டுள்ளது. இடது கை பழக்கம் உள்ளவர்களை பற்றி, படத்தில் காண்பித்துள்ளோம். பெங்களூரின் பல இடங்களில், படப்பிடிப்பு நடக்கும்,'' என்றார்.பவித்ராவின் நிலை கேள்விக்குறிசாண்டல்வுட்டில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய விஷயம் என்றால், நடிகை பவித்ரா லோகேஷ், நடிகர் நரேஷ், ரம்யா ரகுபதி இடையிலான மோதல். பவித்ராவும், நரேஷும் காதலிக்கின்றனர். ரகசிய திருமணம் செய்து கொண்டனர் என தகவல் வெளியானது. நரேஷின் மனைவி ரம்யா, ஊடகத்தினர் முன்னிலையில் விவரித்தார். இது சாண்டல்வுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது ரம்யா, கணவருடன் சேர்ந்துள்ளார். சட்டத்துக்கு பயந்து, நரேஷும் மனைவியை தன் வீட்டில் சேர்த்துக்கொண்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. பவித்ராவின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X