ஓய்வு பெற்ற மேலாளர் கொலை தனியாக இருந்த போது விபரீதம்

Added : செப் 10, 2022 | |
Advertisement
ஆர்.ஆர்., நகர்-வீட்டில் தனியாக வசித்த, பி.இ.எம்.எல்., நிறுவனத்தின் ஓய்வு பெற்ற மேலாளரை, மர்ம கும்பல் கொலை செய்து, பணம், தங்க நகைகளை கொள்ளையடித்தது.பெங்களூரின், பி.இ.எம்.எல்., லே -- அவுட், 5வது ஸ்டேஜ், நான்காவது பிரதான சாலை, 9வது கிராசில் வசித்த மகாதேவய்யா, 85, பி.இ.எம்.எல்.,லில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயம்மா, ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். நான்கு ஆண்டுகளாக மைசூரின், சாரதாதேவி



ஆர்.ஆர்., நகர்-வீட்டில் தனியாக வசித்த, பி.இ.எம்.எல்., நிறுவனத்தின் ஓய்வு பெற்ற மேலாளரை, மர்ம கும்பல் கொலை செய்து, பணம், தங்க நகைகளை கொள்ளையடித்தது.பெங்களூரின், பி.இ.எம்.எல்., லே -- அவுட், 5வது ஸ்டேஜ், நான்காவது பிரதான சாலை, 9வது கிராசில் வசித்த மகாதேவய்யா, 85, பி.இ.எம்.எல்.,லில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயம்மா, ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். நான்கு ஆண்டுகளாக மைசூரின், சாரதாதேவி நகரில் வசிக்கிறார். அவ்வப்போது பெங்களூருக்கு வந்து, கணவரை பார்த்து செல்வார்.மகாதேவய்யாவும், அவ்வப்போது மைசூருக்கு சென்று வருவார். தம்பதி மொபைல் போனில் தொடர்பில் இருந்தனர். செப்டம்பர் 4ல், அவர் வெளியே நடமாடினார். மறுநாள் இவரை யாரும் பார்க்கவில்லை. பக்கத்து வீட்டில் வசிக்கும் பாரதி என்பவர், இதை உணர்ந்து ஜெயம்மாவை மொபைலில் தொடர்பு கொண்டு, 'உங்கள் கணவர் வெளியே தென்படவில்லை' என, கூறினார்.பீதியடைந்த ஜெயம்மா, செப்டம்பர் 8ல் மைசூரிலிருந்து, பெங்களூரு வந்தார். வீட்டுக்கு சென்ற போது கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, கணவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது. பொருட்கள் சிதறி கிடந்தது. பணம், தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரிந்தது.அக்கம், பக்கத்தினரின் உதவியுடன், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த ஆர்.ஆர்., நகர் போலீசார், சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டனர். மகாதேவய்யாவின் உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.சுற்றுப்பகுதியில் பொருத்தப்பட்ட, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்கின்றனர். கொலையாளிகளை கண்டுப்பிடிக்க முயற்சிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X