சட்டசபை கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்: காரசார விவாதம் நடக்கும் என எதிர்பார்ப்பு

Added : செப் 10, 2022 | |
Advertisement
பெங்களூரு-கர்நாடக மழைக் கால சட்டசபை கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினரிடையே காரசார விவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர், கடைசியாக மார்ச் 4ம் தேதி முதல், 30ம் தேதி வரை நடந்தது. ஒரு கூட்டத்தொடர் முடிந்த, ஆறு மாதங்களுக்குள் அடுத்த கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என்பது விதிமுறை.அந்த வகையில், மழைக் கால சட்டசபை



பெங்களூரு-கர்நாடக மழைக் கால சட்டசபை கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினரிடையே காரசார விவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர், கடைசியாக மார்ச் 4ம் தேதி முதல், 30ம் தேதி வரை நடந்தது. ஒரு கூட்டத்தொடர் முடிந்த, ஆறு மாதங்களுக்குள் அடுத்த கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என்பது விதிமுறை.அந்த வகையில், மழைக் கால சட்டசபை கூட்டத்தொடர், பெங்களூரு விதான் சவுதாவில் நாளை காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகிறது. வரும் 23ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்கிறது.முதல் நாளில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதே நாளில் சட்ட மேலவை கூட்டத்தொடரும் ஆரம்பமாகிறது.இதற்கான ஏற்பாட்டை சட்டசபை, சட்ட மேலவை செயலர்கள் மேற்கொண்டுள்ளனர். வெளியூர் எம்.எல்.ஏ.,க்கள் இன்றே பெங்களூரு வர உள்ளனர்.கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., ஆகிய மூன்று கட்சியினருமே எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.மழை வெள்ளம், அரசு பணிகளில் கமிஷன், ஹிந்து பிரமுகர்கள் கொலை உட்பட அரசின் தோல்விகளை கூறி, ஆளுங்கட்சியை திணறடிக்க எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.முதல்வர் பசவராஜ் பொம்மை, அந்தந்த துறை அமைச்சர்களும், எதிர்க்கட்சியினருக்கு தக்க பதிலடி கொடுக்க தயாராகி வருகின்றனர். இதற்காக துறை வாரியாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, அவர்களிடம் தகவல் பெறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X