குற்றங்களை தடுக்க இரவு சோதனை: பெங்களூரு போலீஸ் கமிஷனர் உத்தரவு

Added : செப் 10, 2022 | |
Advertisement
பெங்களூரு-பெங்களூரில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் புறநகர் பகுதியில் 'நைட் பிளான்' இரவு நேர வாகன சோதனையை தீவிரப்படுத்த, கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.பெங்களூரு நகரில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரிக்கிறது. அதோடு போதைப் பொருள் விற்பனையும் அதிகமாக உள்ளது. போதைப் பொருட்கள் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து பெங்களூரு நகருக்கு கொண்டு



பெங்களூரு-பெங்களூரில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் புறநகர் பகுதியில் 'நைட் பிளான்' இரவு நேர வாகன சோதனையை தீவிரப்படுத்த, கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.பெங்களூரு நகரில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரிக்கிறது. அதோடு போதைப் பொருள் விற்பனையும் அதிகமாக உள்ளது. போதைப் பொருட்கள் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து பெங்களூரு நகருக்கு கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி இருந்தாலும், போதைப் பொருள் விற்பனை குறையவில்லை. ஏதாவது ஒரு ரூபத்தில் போதை புழக்கம் உள்ளது. இத்துடன் பெங்களூரில் குற்ற சம்பவங்களில் கைதானவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டம், மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் வெளியூரில் இருந்து வந்து, பெங்களூரில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு பின், சொந்த ஊருக்கு சென்று விடுகின்றனர்.இதனால் குற்றவாளிகளை பிடிப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் இரவு நேரத்தில் பெங்களூரில் இருந்து தப்பிப்பது, நுழைவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது.இதை தடுக்க, பெங்களூரு மாநகர போலீசார், புறநகர் பகுதிகளில் 'நைட் பிளான்' என்ற பெயரில் இரவு நேர வாகன சோதனையை தீவிரப்படுத்த கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன்படி புறநகர் பகுதிகளில் இனிமேல் இரவு 11:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை சோதனை நடத்தப்பட உள்ளது.புறநகர் பகுதிகளில் இருந்து பெங்களூருக்குள் நுழையும் சாலைகளில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபடுவர். ஒவ்வொரு வாகனமும் தீவிர சோதனைக்கு பின் தான் அனுமதிக்கப்படும். குறிப்பாக சோதனைச்சாவடிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. இதற்கான ஊழியர்கள் நியமிக்கப்பட்ட பின், சோதனை துவங்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X