சிவகங்கையில் வரி பாக்கி ரூ.4.59 கோடி: செப்.30க்குள் செலுத்த தவறினால்

Added : செப் 10, 2022 | |
Advertisement
சிவகங்கை-சிவகங்கை நகராட்சியில் இதுவரை 4.59 கோடி ரூபாய் வரி பாக்கி நிலுவையில் உள்ளது. செப்., 30 க்குள் செலுத்தாவிட்டால்நடவடிக்கை எடுக்கப்படும், என நகராட்சி சேர்மன் துரை ஆனந்த் தெரிவித்துள்ளார்.சிவகங்கை நகராட்சி நிர்வாகம் நிதியின்றி தவித்து வருகிறது. 4.59 கோடி வரி வரை பாக்கி நிலுவையில் உள்ளதால் வளர்ச்சி பணிகள் செய்ய முடியவில்லை. செப்.30க்குள் வரி பாக்கி



சிவகங்கை-சிவகங்கை நகராட்சியில் இதுவரை 4.59 கோடி ரூபாய் வரி பாக்கி நிலுவையில் உள்ளது. செப்., 30 க்குள் செலுத்தாவிட்டால்நடவடிக்கை எடுக்கப்படும், என நகராட்சி சேர்மன் துரை ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை நகராட்சி நிர்வாகம் நிதியின்றி தவித்து வருகிறது. 4.59 கோடி வரி வரை பாக்கி நிலுவையில் உள்ளதால் வளர்ச்சி பணிகள் செய்ய முடியவில்லை. செப்.30க்குள் வரி பாக்கி செலுத்தாவிட்டால்குத்தகை கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்படும். வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டித்தல், மற்றும் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும், என நகராட்சித்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:சொத்துவரி நிலுவை பாக்கி 1.6 கோடி ரூபாய், நடப்பு பாக்கி 1.70 கோடி, தொழில் வரி பழைய நிலுவை 29.27 லட்சம், நடப்பு பாக்கி 5.66 லட்சம் ரூபாய், குடிநீர் கட்டணம் பழைய நிலுவை 77.05 லட்சம், நடப்பு பாக்கி 36 லட்சம் ரூபாய், கடை வாடகை பழைய பாக்கி 13.40 லட்சம், நடப்பு பாக்கி 13.09 லட்சம் ரூபாயாகும்.பாதாளசாக்கடை திட்டத்தில் பழைய பாக்கி 9.76 லட்சம், நடப்பு பாக்கி 8.93 லட்சம் ரூபாயாகும்.மொத்தத்தில் 4.59 கோடி ரூபாய் வரி பாக்கியுள்ளது. பொதுவாக நடுத்தர மக்கள், ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் 90 சதவீதம் வரி செலுத்தியுள்ளனர். பெரிய நிறுவனங்கள், நிர்வாகங்கள், பணக்காரர்கள் தான் அதிகளவில் பாக்கி வைத்துள்ளனர். வரி பாக்கியால் நகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் செய்ய முடியாதநிலையில் முடங்கி கிடக்கிறது.

வரி பாக்கி வைத்திருப்போருக்கு சட்ட ரீதியாக அனுப்ப வேண்டிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து வரி பாக்கி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப். 30 க்குள் வரி பாக்கி செலுத்தாவிட்டால் கடைகள், நிறுவனங்கள்மூடி சீல் வைக்கப்படும். வீடுகளில் குடிநீர் இணைப்பு, ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சிக்கு வரி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரித்து பொதுமக்கள் பார்க்கும் இடங்களில் காட்சிப்படுத்தப்படும், என அவர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X