அரசுப்பள்ளிகளில் வகுப்பறை வசதிக்கு நிதி வேண்டும்! 'அட்மிஷன்' அதிகரிப்பால் திண்டாட்டம்

Updated : செப் 11, 2022 | Added : செப் 11, 2022 | |
Advertisement
கோவை: அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய வகுப்பறை, கழிவறை அமைப்புகள் ஏற்படுத்துதல் போன்ற, கட்டமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்காததால், தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் பெரிதும் சிரமப்படுவதாக புகார் எழுந்துள்ளது.மத்திய அரசின், ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் வாயிலாக, பள்ளிகளுக்கு கட்டமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்குவது வழக்கம். இதற்காக மாணவர் விபரங்கள்,
அரசுப்பள்ளிகளில் வகுப்பறை வசதிக்கு நிதி வேண்டும்! 'அட்மிஷன்' அதிகரிப்பால் திண்டாட்டம்


கோவை: அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய வகுப்பறை, கழிவறை அமைப்புகள் ஏற்படுத்துதல் போன்ற, கட்டமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்காததால், தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் பெரிதும் சிரமப்படுவதாக புகார் எழுந்துள்ளது.மத்திய அரசின், ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் வாயிலாக, பள்ளிகளுக்கு கட்டமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்குவது வழக்கம்.

இதற்காக மாணவர் விபரங்கள், பள்ளியில் உள்ள வகுப்பறை, ஆய்வகம், கழிவறை, குடிநீர், கை கழுவும் அமைப்பு ஆகியவற்றின் எண்ணிக்கை குறித்து, ஆண்டுதோறும் 'யூ-டைஸ்' விண்ணப்பத்தின் மூலம் தகவல் திரட்டப்படும். தேவையை கருத்தில் கொண்டு, மாவட்டம், பள்ளியின் பெயரை குறிப்பிட்டு, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும். இது தவிர, மாநில அரசு சார்பிலும், தன்னார்வ அமைப்புகளின் உதவியோடும், அரசு பள்ளிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.கொரோனா தொற்றுக்குப் பின், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

மாணவர்களை அமர வைக்கக்கூட, போதிய இடவசதி இல்லாமல், தலைமையாசிரியர்கள் திண்டாடுகின்றனர். பல பள்ளிகளில், ஆசிரியர்களின் அறையும், வகுப்பறையாக மாற்றப்பட்டுள்ளது. போதிய கழிவறை வசதிகள் இல்லாமல், வகுப்புவாரியாக, இடைவேளை நேரம் ஒதுக்கப்படுகிறது. இச்சிரமங்களை தவிர்க்க, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர வேண்டியது அவசியம் என்ற கருத்து எழுந்துள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:

கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா தொற்றை காரணம் காட்டி, கட்டமைப்பு பணிகளுக்கு, நிதி ஒதுக்கப்படவில்லை. நடப்பாண்டில், தற்போது வரை பராமரிப்பு நிதி கூட ஒதுக்காமல், இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் பள்ளி செயல்பாடுகளுக்கு, பெரிதும் சிரமப்படுகிறோம். இதோடு, வகுப்பறை பற்றாக்குறை, போதிய கழிவறைகள் இல்லாத நிலை நீடிக்கிறது. மாடல் பள்ளி, தகைசால் பள்ளிகள் அறிவிப்பது வரவேற்கத்தக்கது.

இதற்கு நிதி ஒதுக்குவது போல, அனைத்து அரசுப்பள்ளிகளின் அடிப்படை தேவைகளையும் கருத்தில் கொண்டு, நிதி ஒதுக்குவது அவசியம். கார்ப்பரேட் நிறுவனங்களோடு அரசு கைகோர்த்து, தேவையுள்ள பள்ளிகளுக்கு வசதிகளை மேம்படுத்தி தர கோரலாம். இதுசார்ந்து மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆணையர், அமைச்சருக்கு தெரிவிப்பது அவசியம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X