உக்கடம் பெரியகுளத்தில்இன்று ஷாப்பிங் செய்யலாம்!| Dinamalar

உக்கடம் பெரியகுளத்தில்இன்று 'ஷாப்பிங் செய்யலாம்!

Added : செப் 11, 2022 | |
உக்கடம் பெரிய குளத்தில், அங்காடி பொருட்காட்சி நேற்று துவக்கப்பட்டது; இன்று காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடக்கிறது.கோவை மாநகராட்சி, 'ஸ்மார்ட் சிட்டி' நிறுவனத்துடன் இணைந்து, உக்கடம் பெரிய குளத்தில்'ஆல் இன் ஆல்' என்கிற அங்காடி பொருட்காட்சி நேற்று துவக்கப்பட்டது; கலெக்டர் சமீரன் துவக்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை கமிஷனர் ஷர்மிளா முன்னிலை

உக்கடம் பெரிய குளத்தில், அங்காடி பொருட்காட்சி நேற்று துவக்கப்பட்டது; இன்று காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடக்கிறது.

கோவை மாநகராட்சி, 'ஸ்மார்ட் சிட்டி' நிறுவனத்துடன் இணைந்து, உக்கடம் பெரிய குளத்தில்'ஆல் இன் ஆல்' என்கிற அங்காடி பொருட்காட்சி நேற்று துவக்கப்பட்டது; கலெக்டர் சமீரன் துவக்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை கமிஷனர் ஷர்மிளா முன்னிலை வகித்தனர்.மண்டல தலைவர் மீனா, நிலைக்குழு தலைவர்கள் மாரிச்செல்வன், சாந்தி, முபஷீரா, கவுன்சிலர் சுமா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின், அதிகாரிகளும், கவுன்சிலர்களும் இணைந்து படகு சவாரி சென்றனர்.இப்பொருட்காட்சி, இன்று காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடைபெறுகிறது. பெண்களுக்கான ஆடைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஸ்டேஷனரி பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை வாங்குவதற்கு, 'ஸ்டால்'கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X