1,900 கிலோ கஞ்சா; அசாமில் 5 பேர் கைது

Added : செப் 11, 2022 | |
Advertisement
கவுகாத்தி-அசாமில் இரு வேறு இடங்களில் கடத்தி வரப்பட்ட, ௧,௯௦௦ கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வடகிழக்கு மாநிலமான அசாமில், கர்பி ஆங்லாங் மற்றும் கரிம்கஞ்ஜ் மாவட்டங்களில், போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் படி, போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இணைந்து சோதனை நடத்தினர். நாகலாந்து எல்லையில் உள்ள கர்பி

கவுகாத்தி-அசாமில் இரு வேறு இடங்களில் கடத்தி வரப்பட்ட, ௧,௯௦௦ கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான அசாமில், கர்பி ஆங்லாங் மற்றும் கரிம்கஞ்ஜ் மாவட்டங்களில், போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் படி, போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இணைந்து சோதனை நடத்தினர். நாகலாந்து எல்லையில் உள்ள கர்பி ஆங்லாங் மாவட்டத்தில், மணிப்பூரில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ௮௦௦ கிலோ கஞ்சா மற்றும் ௪௦ கிராம் 'ஹெராயின்' கடத்தப்படுவது தெரிய வந்தது. இவற்றின் சர்வதேச மதிப்பு 3 கோடி ரூபாய்க்கும் மேல் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல், கரிம்கஞ்ஜ் மாவட்டத்தில் திரிபுராவில் இருந்து வந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்டதில், ௧,௧௦௮ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதன் மதிப்பு ௩.85 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X