முதல்வர் வேட்பாளர் மேதா பட்கர்? குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு சிக்கல்!

Added : செப் 11, 2022 | |
Advertisement
வரும் குஜராத் சட்டசபைத் தேர்தலில், தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக, சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கரை நிறுத்த ஆம் ஆத்மி திட்டமிடுகிறது என கூறப்படும் தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குஜராத்தில் முதல்வர்பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பஞ்சாபில் நடந்த சட்டசபை
முதல்வர் வேட்பாளர் மேதா பட்கர்? குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு சிக்கல்!

வரும் குஜராத் சட்டசபைத் தேர்தலில், தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக, சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கரை நிறுத்த ஆம் ஆத்மி திட்டமிடுகிறது என கூறப்படும் தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் முதல்வர்பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பஞ்சாபில் நடந்த சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி, இங்கும் தீவிரமாக களப்பணி செய்து வருகிறது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள், குஜராத்திற்கு அடிக்கடி சென்று, தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும், தங்களது முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, ஆம் ஆத்மி இதுவரையிலும் அறிவிக்கவில்லை. மக்களுக்கு நல்ல அறிமுகம் உள்ள தலைவர் ஒருவரை தேர்வு செய்ய ஆம் ஆத்மி விரும்புகிறது.இதையடுத்து, நர்மதா அணையின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பிரபலமான மேதா பட்கரை, 67, முதல்வர் வேட்பாளராக நிறுத்த, கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அணுகி பேசியுள்ளனர். ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில், பல்வேறு குழப்பங்கள், சந்தேகங்கள்இருந்தும், இரு தரப்பும்தொடர்ந்து பேசி வருவதாக தெரிகிறது.இதை மோப்பம் பிடித்துவிட்ட பா.ஜ., மேதா பட்கர் குறித்து பேசத் துவங்கியுள்ளது.

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:மேதா பட்கர், பழங்குடியினர் வசிக்கும் பகுதியில், பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் பணிகள் காரணமாக, சில இடங்களில் அவருக்கு கொஞ்சம் ஆதரவு இருக்கலாம். இதை அறுவடை செய்யலாம் என்ற நோக்கத்தில் மேதா பட்கரை, குஜராத் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் பார்க்கின்றனர்.

ஆனால், அது நிச்சயம்எதிரான தாக்கத்தை தான் தரப்போகிறது. காரணம், கட்ச் பகுதியில் நிலவும் வறட்சியைப் போக்கும் வகையில், குடிநீர் தேவையை நிறைவேற்றியவர் பிரதமர் நரேந்திர மோடி. அம்மக்களுக்கு குடிநீர் கிடைக்கக் கூடாது என்று நினைத்தவர் மேதா பட்கர்.இதை, குஜராத் மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். எனவே, ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக மேதா பட்கரை நிறுத்தினால், அது நிச்சயம் தோல்வியில் தான் முடியும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

- நமது டில்லி நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X