ராஜ்யசபா எம்.பி.,யாகிறார் திரிபுரா முன்னாள் முதல்வர்

Added : செப் 11, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி-வட கிழக்கு மாநிலமான திரிபுராவின் முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ், பா.ஜ., சார்பில் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திரிபுராவில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதை கருத்தில் வைத்து, ஏற்கனவே முதல்வராக இருந்த, பா.ஜ.,வைச் சேர்ந்த பிப்லப் குமார் தேவ் அதிரடியாக மாற்றப்பட்டார். ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த
ராஜ்யசபா எம்.பி.,யாகிறார் திரிபுரா முன்னாள் முதல்வர்

புதுடில்லி-வட கிழக்கு மாநிலமான திரிபுராவின் முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ், பா.ஜ., சார்பில் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திரிபுராவில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதை கருத்தில் வைத்து, ஏற்கனவே முதல்வராக இருந்த, பா.ஜ.,வைச் சேர்ந்த பிப்லப் குமார் தேவ் அதிரடியாக மாற்றப்பட்டார். ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த மாணிக் சகா, முதல்வராக நியமிக்கப்பட்டார்.மாணிக் சகா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததால், அந்த இடத்துக்கு வரும் 22ல் தேர்தல் நடக்கவுள்ளது. இதில், பா.ஜ., சார்பில்முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சட்டசபையில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இருப்பதால், பிப்லப் குமார் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இவர், நேற்று முன்தினம் தான், ஹரியானாமாநிலத்துக்கான பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
11-செப்-202209:55:46 IST Report Abuse
Suri ஒரு கை ஓசை படத்தில் வாத்துமடையன் காமடி மிக பிரசித்தி பெற்றது.. அது போல ஒரு காமெடியை இந்த உருப்படி அரங்கேற்றி இதன் மானம் மற்றும் பீசப்பி மானத்தை கப்பல் விமானம் ரயில் எல்லாம் ஏற்றி அனுப்பிய ஆசாமிக்கு பதவி கொடுத்து அசிங்கப்படும் கட்சி உலகிலேயே இது ஒன்றாக மட்டும் தான் இருக்கும் எல்லோருமே வாத்துமடயர்களாக இருக்கமுடியுமா??
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
11-செப்-202206:32:37 IST Report Abuse
Suri பதவி கொடுத்து அழகு பார்க்கும் இன்னும் ஒரு அதிபுத்திசாலி கட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X