10 ஆண்டில், 6,305 பேர் அதிகரிப்பு?உத்தேச கணக்கெடுப்பால் குழப்பமோ குழப்பம்| Dinamalar

10 ஆண்டில், 6,305 பேர் அதிகரிப்பு?உத்தேச கணக்கெடுப்பால் குழப்பமோ குழப்பம்

Added : செப் 11, 2022 | |
அவிநாசி:பூண்டி நகராட்சி பகுதி மக்கள் தொகை, 10 ஆண்டில், 6,305 பேர் அதிகரித்திருக்கின்றனர் என, கணக்கிடப்பட்டுள்ளது.கடந்த, 2011க்கு பின், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்ற சூழலில், அப்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தான், அரசின் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், கடந்த, 2011ல், 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள பேரூராட்சிகள்,

அவிநாசி:பூண்டி நகராட்சி பகுதி மக்கள் தொகை, 10 ஆண்டில், 6,305 பேர் அதிகரித்திருக்கின்றனர் என, கணக்கிடப்பட்டுள்ளது.கடந்த, 2011க்கு பின், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்ற சூழலில், அப்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தான், அரசின் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், கடந்த, 2011ல், 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள பேரூராட்சிகள், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன.அதனடிப்படையில், திருமுருகன்பூண்டி பேரூராட்சியும், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த, 2011ல், பூண்டி பேரூராட்சி மக்கள் தொகை, 31 ஆயிரத்து 528 என அதிகாரபூர்வமாக கணக்கிடப்பட்டிருந்தது. அதன்பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், தற்போதைய மக்கள் தொகை, 37 ஆயிரத்து 833க்கு மேல் உள்ளது என, நகராட்சி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.அதன்படி, 10 ஆண்டில், வெறும், 6.305 பேர்தான் அதிகரித்துள்ளனர். இந்த தோராய கணக்கு, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.பூண்டி நகராட்சி பொதுமக்கள் சிலர் கூறியதாவது:பூண்டி, பெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறது; கடந்த, 20 ஆண்டுகளில், வேலை தேடி திருப்பூர் வரும் மக்கள், பூண்டி, அவிநாசி பகுதியில் 'செட்டில்' ஆகின்றனர். தவிர, வட மாநில தொழிலாளர்களும்,குடும்பத்துடன் இடம் பெயர்ந்து இப்பகுதிகளில் வசிக்க துவங்கியிருக்கின்றனர்.தொழில் நகரமாக உருவெடுத்து வரும் பூண்டியின் மக்கள் தொகை, கடந்த, 10 ஆண்டுகளில் கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது. ஆங்காங்கே ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை, கழிவுநீர் கால்வாய் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள குறை என அடுத்தடுத்து எழும் பிரச்னைகளே இதற்கு சான்று.எனவே, துல்லியமான கணக்கெடுப்பு நடத்தி, அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு, திட்டம் தயாரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X