வேலம்மாள் போதி கல்வி மையம் 'நீட்' தேர்வில் புதிய சாதனை

Added : செப் 11, 2022 | |
Advertisement
சென்னை-'நீட்' நுழைவுத் தேர்வில், வேலம்மாள் போதி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 291 மாணவர்கள், 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.வேலம்மாள் போதி கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் வெற்றிக்கு, நடப்பு ஆண்டிலும் பெரும் ஊக்கத்தை இம்மையம்

சென்னை-'நீட்' நுழைவுத் தேர்வில், வேலம்மாள் போதி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 291 மாணவர்கள், 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.வேலம்மாள் போதி கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் வெற்றிக்கு, நடப்பு ஆண்டிலும் பெரும் ஊக்கத்தை இம்மையம் அளித்துள்ளது.இந்தாண்டு பயின்ற 291 மாணவர்கள், நீட் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். அவர்களில் 176 பேர் 550க்கு மேல்; 75 பேர் 600க்கு மேல்; 23 பேர் 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.வேலம்மாள் போதி கல்வி மையத்தில் பயின்ற சஞ்சய் கிரிஷ் என்ற மாணவர், மொத்தம் 720 மதிபெண்களுக்கு 700 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில் 72வது இடத்தை பிடித்துள்ளார்.

வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் இயக்குனர் எம்.வி.எம்.சசிகுமார் கூறியதாவது:மாணவர்களின் கனவுகளை நிஜமாக்கக் கூடிய பயணத்தில், வழிகாட்டிகள் வடிவில், எங்கள் ஆசிரியர்களும் ஒரு பகுதியாக திகழ்கின்றனர். அவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற நினைப்பவர்களின் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில், உண்மையிலேயே அர்ப்பணிப்புடனும், ஆர்வமாகவும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பயிற்சி மைய சேர்க்கை தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, 96771 47777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X