மனைவியின் தங்கையை கடத்திய வழக்கு:கூடலூர் எஸ்.ஐ., டிஸ்மிஸ்

Added : செப் 11, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
ஊட்டி:மனைவியின் சித்தப்பா பெண்ணை கடத்திய வழக்கு சம்பந்தமாக கூடலூர் எஸ்.ஐ.,யை பணி நீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 35, இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு கோபி மதுவிலக்கு பிரிவில் எஸ்.ஐ., பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் மனைவியின் சித்தப்பா பெண், திவ்ய பாரதி, 24, திருமணம்
 மனைவியின் தங்கையை கடத்திய வழக்கு:கூடலூர் எஸ்.ஐ., டிஸ்மிஸ்

ஊட்டி:மனைவியின் சித்தப்பா பெண்ணை கடத்திய வழக்கு சம்பந்தமாக கூடலூர் எஸ்.ஐ.,யை பணி நீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 35, இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு கோபி மதுவிலக்கு பிரிவில் எஸ்.ஐ., பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் மனைவியின் சித்தப்பா பெண், திவ்ய பாரதி, 24, திருமணம் முடிக்க வேண்டும் என்ற விபரீத ஆசை இவருக்கு ஏற்பட்டு உள்ளது. பல்வேறு வகையில் திட்டமிட்டு, 2018-ம் ஆண்டு பி.எட்., படித்து வந்த திவ்ய பாரதியிடம் மதுரையில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து வெங்கடாசலம் தனது மனைவி சத்யாவுடன் தங்கை திவ்ய பாரதியை அழைத்து ஈரோட்டில் இருந்து மதுரைக்கு காரில் சென்றுள்ளனர்.
மதுரைக போலீஸ் சோதனை சாவடியில் தனது மனைவியை இறக்கி விட்டு மனைவியின் சித்தப்பா பெண் திவ்யபாரதியை மட்டும் கடத்தி கொண்டு மதுரைக்கு சென்றுள்ளார். இதனால் , அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி இதுகுறித்து சோதனைச்சாவடியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் நெடுஞ்சாலைத்துறை போலீசாரின் உதவியுடன் வெங்கடாசலத்தை மதுரைக்கு செல்லும் வழியில் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், வெங்கடாசலம் மனைவியின் சித்தப்பா பெண், திவ்ய பாரதியை கடத்தி சென்றது உறுதியானது. இதைத்தொடர்ந்து கடத்தல் வழக்கு பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த வெங்கடாசலம் மீண்டும் பணியில் சேர்ந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் போலீஸ் ஸ்டேனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கோவை சரக டி.ஐ.ஜி., முத்துசாமி கூறுகையில், மனைவியின் சித்தப்பா பெண் கடத்தல் வழக்கு சம்பந்தமாக கூடலூர் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வந்த வெங்கடாசலம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதியானதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். என்றார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
15-செப்-202205:37:18 IST Report Abuse
NicoleThomson என்ன வகையான மேலதிகாரிகள் இவர்கள் , ஒருவேளை அவர்களின் பெண்ணையும் இவருக்கு?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-செப்-202206:28:02 IST Report Abuse
D.Ambujavalli போலீஸ் ஆயிற்றே, என்ன ஆட்டம் போட்டாலும் தப்பிக்கலாம் என்ற அகங்காரம் மனைவி வைத்தார் வெட்டு வெறும் பணிநீக்கம் தானா, உள்ளே தள்ள வேண்டாமா ?
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
11-செப்-202211:37:08 IST Report Abuse
ponssasi வெங்கடாசலம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதியானதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் வந்து மீண்டும் பணியில் சேர்ந்தார். கூடலூர் போலீஸ் ஸ்டேனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் பணியில் சேர காரணமான அதிகாரிகள் அனைவர்மீது பெண்ணை கடத்த உடந்தையாக இருந்ததாக கூறி வழக்கு தொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X