அரசு பள்ளி மாணவர்'நீட்' தேர்வில் சாதனை

Added : செப் 11, 2022 | |
Advertisement
குரோம்பேட்டை:குரோம்பேட்டையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர், 'நீட்' தேர்வில், முதல் முயற்சியிலேயே 503 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளார்.குரோம்பேட்டை, அக்கீஸ்வரர் காலனி, ஆறாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. பிரின்டிங் பிரஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.இரண்டாவது மகன் சுந்தர்ராஜன், 17,
அரசு பள்ளி மாணவர்'நீட்' தேர்வில் சாதனை

குரோம்பேட்டை:குரோம்பேட்டையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர், 'நீட்' தேர்வில், முதல் முயற்சியிலேயே 503 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

குரோம்பேட்டை, அக்கீஸ்வரர் காலனி, ஆறாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. பிரின்டிங் பிரஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.இரண்டாவது மகன் சுந்தர்ராஜன், 17, குரோம்பேட்டை, சி.எல்.சி., சாலையிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
பொதுத் தேர்வில், 576 மதிப்பெண்கள் பெற்று, செங்கல்பட்டு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். பின், 'நீட்' தேர்வு எழுத எவ்வித பயிற்சி மையத்திற்கும் செல்லாமல், சுந்தர்ராஜன் வீட்டிலேயே சுயமாக படித்து, தேர்வு எழுதினார்.
கடந்த 7ம் தேதி வெளியான 'நீட்' தேர்வு முடிவில், சுந்தர்ராஜன் 720க்கு 503 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.அரசு பள்ளி மாணவர் ஒருவர், எவ்வித பயிற்சி மையத்திற்கும் செல்லாமல், 'நீட்' தேர்வில், முதல் முயற்சியிலேயே 503 மதிப்பெண்கள் பெற்றது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.சாதனை படைத்த சுந்தர்ராஜனை பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பாராட்டினர்.
இது குறித்து, சுந்தர்ராஜன் கூறியதாவது:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 புத்தகங்களை முழுதுமாக புரிந்து படித்தாலே போதும். அதேபோல், வீட்டில் நிறைய பயிற்சி பெற வேண்டும்.கேள்வித்தாள் புத்தகத்தில் உள்ள பழைய கேள்விகளை திரும்பத் திரும்ப புரிந்து படித்தால், 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.'நீட்' தேர்வில், அரசு பள்ளி மாணவர்களாலும் சாதிக்க முடியும். அதற்கு மன உறுதியும், தைரியமும் இருந்தால் போதும்.இவ்வாறு அவர் கூறினார்.
'நீட்' தேர்வில் சாதனை படைத்த சுந்தர்ராஜனுக்கு, குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், இன்று காலை, சங்கத்தின் தலைவர் சந்தானம் தலைமையில், பாராட்டு விழா நடத்தப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X