குடிசை, விவசாயம், கைத்தறி மின்சார மானியம் தொடரும்

Updated : செப் 11, 2022 | Added : செப் 11, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நேற்று முதல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், மின் வாரியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:  தமிழகத்தில் உள்ள 2.37 கோடி வீட்டு நுகர்வோரில், ஒரு கோடி பேருக்கு மின் கட்டண உயர்வு இல்லை அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரமும், குடிசை வீடுகளுக்கு முழு இலவச மின்சாரமும் வழங்கப்படும் குடிசை, விவசாயம், கைத்தறி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நேற்று முதல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், மின் வாரியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:



latest tamil news


 தமிழகத்தில் உள்ள 2.37 கோடி வீட்டு நுகர்வோரில், ஒரு கோடி பேருக்கு மின் கட்டண உயர்வு இல்லை அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரமும், குடிசை வீடுகளுக்கு முழு இலவச மின்சாரமும் வழங்கப்படும்

 குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிபாட்டுத் தலங்கள் ஆகிய பிரிவுகளுக்கு, மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மின் கட்டணம் 55 ரூபாய் உயர்ந்துள்ளது. 300 யூனிட் வரை 145 ரூபாயும்; 400 யூனிட் வரை 295 ரூபாயும்; 500 யூனிட் வரை, 595 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது மக்களிடம் படிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், வணிக ரீதியில் இயங்காத நுாலகத்திற்கான மின் கட்டணத்தை, 30 சதவீதம் குறைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது


latest tamil news


 விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதற்கு மேல் யூனிட்டிற்கு, 70 காசு மட்டுமே உயர்ந்துஉள்ளது தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு 50 கிலோ வாட் வரை நிலைக் கட்டணம் மாதம் ஒன்றுக்கு, 1 கிலோ வாட்டிற்கு 100 ரூபாயில் இருந்து 75 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது தமிழக அரசின் மானியம் ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளதுடாக்டர்கள், வழக்கறிஞர் போன்றோர் தங்கள் வீட்டில் அமைத்துள்ள அலுவலகத்திற்கு, 200 சதுர அடி வரை மட்டும், வீட்டுப் பிரிவுக்கான மின் கட்டணம் வசூலிக்கப்படும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
11-செப்-202208:34:27 IST Report Abuse
a natanasabapathy Kazhttappattu sambaathiththu vari kattubavan ஏமாளி உழைக்காமல் ஓசியில் அனைத்து சலுகைகளையும் அனுபவிப்பவன் புத்திசாலி. குடிசை வீடு என்று தான் பெயர் .TV mini fridge induction stove இரு சக்கர வாஹனம் அனைத்தும் வைத்துள்ளனர் .grinder வைத்து மாவு அரைத்து வியாபாரம் செய்கின்றனர் . மின்சார மீட்டர் வைத்து 100 யூனிட்டுக்கு Mel பயன்படுத்தினால் பணம் வசூலிக்க வேண்டும்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
11-செப்-202207:02:22 IST Report Abuse
NicoleThomson விசைத்தறி நண்பர்கள், நண்பர் farmtechtube சஞ்சீவியை தொடர்பு கொள்ளுங்க, உங்களின் தறி மற்றும் அதன் தொடர்புள்ள கருவிகளுக்கு அவரின் சோலார் பயனுள்ளதாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X