கிரிக்கெட் விளையாட அனுமதி கோரிநண்பனுக்காக மணமகளிடம் ஒப்பந்தம்

Added : செப் 11, 2022 | |
Advertisement
உசிலம்பட்டி:திருமணத்திற்கு பிறகும் தங்களது நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டுமென, அவரது நண்பர்கள் மணமகளிடம் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி, கீழப்புதுார் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத், 30; தேனி தனியார் கல்லுாரி விரிவுரையாளர்.கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுடைய இவருக்கும்,
கிரிக்கெட் விளையாட அனுமதி கோரிநண்பனுக்காக மணமகளிடம் ஒப்பந்தம்

உசிலம்பட்டி:திருமணத்திற்கு பிறகும் தங்களது நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டுமென, அவரது நண்பர்கள் மணமகளிடம் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி, கீழப்புதுார் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத், 30; தேனி தனியார் கல்லுாரி விரிவுரையாளர்.கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுடைய இவருக்கும், தேனியைச் சேர்ந்த பட்டதாரி பூஜா, 25, என்பவருக்கும் உசிலம்பட்டியில் திருமணம் நடந்தது. ஹரிபிரசாத் நண்பர்கள், ஒரு ஒப்பந்த பத்திரத்துடன் திருமணத்திற்கு வந்தனர். மணமகளிடம் பத்திரத்தை கொடுத்து, 'ஹரிபிரசாத்தை தொடர்ந்து கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும்' என்றனர். சனி, ஞாயிறுதோறும் மணமகன் கிரிக்கெட் விளையாட சம்மதிப்பதாக, மணமகளிடம் பத்திரத்தில் கையெழுத்து பெற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X