பெண்ணை தவறாகசித்தரித்தவர் சிக்கினார்

Added : செப் 11, 2022 | |
Advertisement
எம்.ஜி.ஆர்., நகர்:எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த, திருமணமான பெண் ஒருவரின் மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டு, பலர் ஆபாசமாக பேசுவதாக, எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் விசாரித்தனர்.இதில், எம்.ஜி.ஆர்., நகர், சூளைப்பள்ளம், ராஜிவ் காந்தி தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான ராஜேஷ், 35, என்பவர் முகநுாலில் 'பாலியல் தொழிலாளி' என்பது

எம்.ஜி.ஆர்., நகர்:எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த, திருமணமான பெண் ஒருவரின் மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டு, பலர் ஆபாசமாக பேசுவதாக, எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் விசாரித்தனர்.இதில், எம்.ஜி.ஆர்., நகர், சூளைப்பள்ளம், ராஜிவ் காந்தி தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான ராஜேஷ், 35, என்பவர் முகநுாலில் 'பாலியல் தொழிலாளி' என்பது போன்று, அப்பெண்ணின் மொபைல் போன் எண்ணை பதிவிட்டு, அவதுாறு பரப்பியது தெரிய வந்தது.

தொடர் விசாரணையில், அப்பெண்ணின் மொபைல் போனிற்கு, ராஜேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். இதை அவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர் அவதுாறு பரப்பியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X