5,386 மாணவர்கள் முதலுதவி பயிற்சி'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சில்' பதிவு

Added : செப் 11, 2022 | |
Advertisement
கோவை:கோவையில் ஒரே நேரத்தில், 5,386 மாணவர்கள் முதலுதவி விழிப்புணர்வு செய்முறை பயிற்சி செய்து, உலக சாதனை புரிந்தது 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சில்' பதிவானது.உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட நிர்வாகம், 'அலெர்ட்' என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற, முதலுதவி விழிப்புணர்வு செயற்முறை பயிற்சியை வேளாண் பல்கலை
5,386 மாணவர்கள் முதலுதவி பயிற்சி'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சில்' பதிவு

கோவை:கோவையில் ஒரே நேரத்தில், 5,386 மாணவர்கள் முதலுதவி விழிப்புணர்வு செய்முறை பயிற்சி செய்து, உலக சாதனை புரிந்தது 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சில்' பதிவானது.உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட நிர்வாகம், 'அலெர்ட்' என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற, முதலுதவி விழிப்புணர்வு செயற்முறை பயிற்சியை வேளாண் பல்கலை வளாகத்தில் நேற்று நடத்தியது; 49 கல்வி நிறுவனங்களை சேர்ந்த, 5,386 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
மயக்கத்தில் இருப்பவரை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளிப்பது, ஆம்புலன்ஸ் வரவழைப்பது, டாக்டரை வரவழைப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வு உலக சாதனையாக, 'ஆசியா புக் ஆப் ரிக்கார்ட்ஸில்' பதிவு செய்யப்பட்டது.இதுகுறித்து, கோவை கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறுகையில், '' உலக முதலுதவி தினத்தையொட்டி, கோவை மாவட்டத்தில் ஒரே இடத்தில், 49 நிறுவனங்களை சேர்ந்த, 5,386 மாணவ மாணவியர் அடிப்படை முதலுதவி செயல்முறை பயிற்சி செய்தனர்.
இதை 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' பதிவு செய்து, கோவை மாவட்ட நிர்வாகத்துக்கும், 'அலெர்ட்' தொண்டு நிறுவனத்துக்கும் உலக சாதனை விருது வழங்கியுள்ளது. மேலும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியையும் மாணவ மாணவியர் ஏற்றனர்,'' என்றார்.உலக சாதனைக்கான சான்றிதழை, 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அட்ஜடிகேட்டர் விவேக், கலெக்டரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, 'அலெர்ட்' தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் மைக் முரளிதரன், நிறுவனர் கலா பாலசுந்தரம், இணை நிறுவனர் ராஜேஷ், எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி தாளாளர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X